சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !

Vinkmag ad

kamalsasar

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில்  17.08.2013 அன்று முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர்

 

சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் பேராசிரியருக்கு முனைவர் பட்டம் !

 

கணிதப் புள்ளியலில் முதல் முறையாக முனைவர் பட்டம் பெற்றம் முஸ்லிம் பேராசிரியர் ! !

சென்னை : சென்னை புதுக்கல்லூரியின் கணிதத்துறை இணைப் பேராசிரியராக
பணிபுரிந்து வருபவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த வ .
கமால் நாசர்.

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் ‘கணிதப்
புள்ளியியல்’ ( Mathematical Statistics ) எனும் தலைப்பில் ஆய்வினை
மேற்கொண்டு வந்தார். இவருக்கு கடந்த மே மாதம் 9 ஆம் தேதி  சென்னைப் பல்கலைக்கழக புள்ளியியல் துறையில் நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் முனைவர் பட்டம் உறுதி செய்யப்பட்டது.

மேலும் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர்கள் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். முதுகுளத்தூர் முஸ்லிம் நலச் சங்கத்திலும் முக்கியப்  பொறுப்பினை வகித்து வருகிறார். சென்னையில் உள்ள Teachers Guild of Society-ன் Board of Director- ஆகவும் இருந்து வருகிறார்.

2013-08-17 14.06.07 (1)முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை பயின்ற பின்னர் மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் இளநிலை பட்டமும் (கணிதம்) மேலும் மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுநிலை பட்டமும் (கணிதம்) பெற்றார். சென்னை புதுக்கல்லூரியில் (அரசு உதவி பெரும் கல்லூரி) 1995-ம் ஆண்டு உதவிப் பேராசிரியராக தனது பணியை துவங்கி, தற்போது முனைவர்  பட்டம் பெற்றுள்ளார்.

உயர்கல்வி பயின்று வரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவோர் நம்மவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவே.

இத்தகைய சூழலில் முனைவர் பட்டம் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் வ. கமால் நாசர். சமுதாய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கும், ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் தான் உறுதுணையாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

முனைவர் பட்டம் பெற்ற கமால் நாசரை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள், முதுகுளத்தூர்.காம் இணைய இதழின் ஆசிரியர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Mr.V.Kamalnasar number is 09940087771

News

Read Previous

எங்கள் இரத்தம்!

Read Next

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி தேதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *