தையல் தொழிலுக்கு பெருகும் தேவைகள்: வீட்டிலே இருந்தவாறே சம்பாதிக்கலாம்…

Vinkmag ad

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது, உடுத்தும் உடை. அலை கடலென அதில்சுயதொழில் வாய்ப்புகள் உள்ள நிலையில், தையல் பயிற்சி பெற்று சிறிய அளவில் தொழில் தொடங்கிவருவாய் ஈட்ட வாய்ப்புகள் அதிகமுள்ளன.

 

குறிப்பாக, இல்லத்தரசிகளும், பகுதி நேர தொழில் தேடுவோரும் ஈடுபட்டு எளிதாக வருவாய் ஈட்டும்வழியாகவும் தையல் இருக்கிறது. மனிதன் உயிரோடு இருக்கும் வரை உடைகள் அவசியம். பெரியளவுமூலதனம் இன்றி, பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று.

 

இதற்கு தேவையானவை ஒன்று தையல் அறிவு மற்றது ஒரு தையல் இயந்திரம். இவற்றோடு உதவி பொருட்களான நூல், ஊசி, பட்டன்,கத்தரிகோல், அளவு நாடா போன்றவை. அதிக சந்தை வாய்ப்புள்ள இந்த தொழிலை வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப செய்து கொடுக்கும்பொழுது பணத்தை கொட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சித்திரமும் கைப்பழக்கம். என்ற பழமொழி போல, தையல் என்பது காலங் காலமாக கைகளில் தொடங்கி, கால்களில் தொடரும் ஒரு கலைஎனலாம். அதைப் பழகப் பழகவே நுணுக்கங்களை அறிந்து தொழிலாக மேற்கொண்டு பணம் சம்பாதிக்க முடியும். எந்த நாளும் தேவை பெருகிக்கொண்டிருக்கும் தையல் தொழிலில் ஈடுபட, முதலில் கைக்குட்டை, தலையணை போன்ற எளிதான வடிவங்களில் அதைத் தொடங்கலாம்.

 

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று என்பதைத் தாண்டி, நவீனமயம், ஸ்டைல், ஃபேஷன் என ஆடைகளுக்கு எல்லை விரிகிறது.எனவே, தையல் பயிற்சியைப் பெற்று வீட்டிலிருந்தபடியே சுயதொழிலை தொடங்க வாய்ப்பிருக்கிறது. ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்ததையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும்.

 

மிக முக்கியமாக, நைட்டி என்பது வீட்டிலிருக்கும்போது பெண்களின் வசதியான உடையாக மாறிவிட்டது. இன்று எந்த வயதில் உள்ள பெண்களும்உபயோகிக்கும் பரவலான உடையாகிவிட்டது. கடைகள்ல சுத்தமான காட்டன் துணியில் தயாரான நைட்டிகள் கிடைக்காது.

 

இதயையே வீட்டில் தொழிலாகச் செய்யும்போது, வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப சுத்தமான காட்டன் அல்லது, சாட்டின் மாதிரி வேறமெட்டீரியல்லயோ தைத்து விற்கலாம். ஜிப் வச்சது, எலாஸ்டிக் வச்சது, ஸ்லீவ்லெஸ்னு 3 மாடல்கள்ல நைட்டிகளை தைது விற்கலாம்.

முறைப்படி தையல் தொழில் கற்றுக்கொள்ளாமல், தையல் தொழிலோடு சம்பந்தப்பட்ட சில துணைத் தொழில்களை செய்து கொடுத்துசம்பாதிக்கலாம். உறவினர், நண்பர்களிடம் ஆர்டர் பெற்று தைத்துத் தருவதோடு, பெரிய தையலகங்கள், ஆடை நிறுவனங்களின் ஆர்டரைபெற்றும் தலையணை, திரைச்சீலை, மேஜைத் துணி, குஷன்கள் என தைத்துத் தந்து வருவாய் ஈட்டலாம்.

 

நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூட தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம். இல்லத்தரசிகள்,பகுதி நேர தொழில்முனைவோர் வீட்டிலிருந்தே தையல் வேலையை செய்து தரலாம் என்பதால் முதலீடு என அதிகம் தேவையிருக்காது.‌

 

சந்தை வாய்ப்பு என்று பார்க்கும்போது, ஜவுளி கடைகளுக்கு மொத்தமாக விநியோகம் செய்யலாம். பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள்,தனியார் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் சில்லரையாக விற்கலாம். கண்காட்சிகள், பொருட்காட்சிகளில் கடை போட்டுவிற்கலாம்.

 

தையல் அனுபவம் உள்ளவங்க ஒரு நாளைக்கு 10 நைட்டி அல்லது 20 பாவாடை தைக்கலாம். முதல்ல வீட்டுக்குப் பக்கத்துல உள்ளவங்களுக்கும்,சின்னச் சின்னக் கடைகளுக்கும் கொடுத்துப் பார்க்கலாம். யாருக்கு, எப்படி வேணும்னு கேட்டும் தச்சுக் கொடுக்கலாம். நல்ல லாபம் நிச்சயம்.

 

எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பலவேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன. தையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களைதெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையலில் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய முடியும்.

 

தையல் தொழிலைத் தொடங்க, பயிற்சியும் குறைந்த முதலீட்டில் புதிதோ, பழையதோ தையல் இயந்திரமும்தான் முக்கியத் தேவைகள். அதோடு,குறைந்த செலவாகக் கூடிய நூல், கத்தரி உள்ளிட்ட மூலப் பொருட்களோடு கூடுதலாக ஆர்வத்தையும் சேர்த்து தையல் இயந்திர சக்கரத்தைசுழற்றினால் வாழ்க்கைச் சக்கரம் வசதி பெறுவது சாத்தியமே

News

Read Previous

முதுகுளத்தூர் சுப்பிரமணியர் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

Read Next

வீடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *