இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

Vinkmag ad

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம்.
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

News

Read Previous

திருவனந்த புரம் அரசு மருத்துவமனை

Read Next

கவலைக்கு இடம் தராதீர்கள்..

Leave a Reply

Your email address will not be published.