தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்

Vinkmag ad

சிங்கப்பூர் இந்தியர்கள் தமிழ் மொழியில் ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மொழி மாதம் ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டின் தொடக்கவிழா  மார்ச் திங்கள் 29-ஆம் நாள் மீடியாகாப் தொலைகாட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அதை முன்னிட்டு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பாலம் ஏற்பாட்டுக்குழு, ‘தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் என்னும்  தலைப்பில் மார்ச் திங்கள் 30-ஆம் நாள் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து உத்தமத்தின்  உறுப்பினர் திரு.எஸ்.மணியம், திரு.முஹைதின் பிச்சை,திரு.கல்யாண்குமார் ஆகியோரும் மலேசியாவிலிருந்து  திரு இல.வாசுதேவன், திரு.ஆர்.சேதுபதி ஆகியோரும் பேசள்ளனர்.

தலைப்புகள்

1.தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்;    நேற்று, இன்று, நாளை _

       திரு.எஸ்.மணியம். சிங்கப்பூர்

2.  தமிழ் மின்னூல் உருவாக்கம்     :   திரு. இல.வாசுதேவன் ,மலேசியா

3.இணையத்தில் தமிழ்       :   திரு.முஹைதின் பிச்சை,சிங்கப்பூர்.

4.செயலிகள் (apps)  உருவாக்கும் வழிமுறைகள் : திரு.கல்யாண்குமார் ,சிங்கப்பூர்.

5.கற்றல் கற்பித்தலில் தமிழ் வளர்ச்சி : திரு ஆர். சேதுபதி. மலேசியா.

தமிழைப் பயன்படுத்துகின்ற அனைவருக்கும் இது ஓர் அரிய வாய்ப்பாகும். இவ்வாய்ப்பைத் தகவல் தொழில் நுட்பத்தில் தமிழை எவ்வாறெல்லாம்  பயன்படுத்தி நன்மை அடையலாம் என்பதைக் கற்றுக் கொள்ள இது  நல்லதொரு சந்தர்ப்பமாகும். இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வாலர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு  ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் அன்போடு வேண்டுகிறோம். குறைவான இடங்களே இருப்பதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் முழுப்பயனடைய தகவல் தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு வாருங்கள்.

நாள் :   30. 03. 2014

நேரம் :  காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

இடம் :   சிங்கப்பூர் பலதுறைக் கல்லூரி விரிவுரை அரங்கு

( டோவர் எம் ஆர் டீ  நிலையம்)

முன்பதிவுக்கு  www.vtamil.org

தொடர்புக்கு – திரு.எஸ்.மணியம், smaniam53@gmail.com.  கைபேசி 97805920

News

Read Previous

அரசியல் அரிச்சுவடி

Read Next

அல்லாஹ்வின் திருப்பெயரால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *