காமராசர் பிறந்த நாள் உலக சாதனை நிகழ்வு

Vinkmag ad

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 118 வது பிறந்த தினம் ஜூலை மாதம் 15-ம் திகதி கொண்டாடபடுகிறது. அவரை நினைவு கூறுவதும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதும் ஏன் அவசியமாகிறது? இந்தியா முழுவதும் மிகவும் ஆழமான செல்வாக்கு செலுத்திய காமராஜர் அவர்கள் இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்குமளவிற்கு இந்தியாவின் அரசியலில் செல்வாக்கு செலுத்திய ஒரு தமிழன் என்பதில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் உயர்சாதியை சேர்ந்த கல்விமான்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்திய ஒரு காலம். அந்த காலத்தில் காமராஜர் போன்ற கல்வியறிவு இல்லாத, அடிமட்டத்தில் இருந்து எந்தவொரு அரசியல், கல்வி பின்புலம் இல்லாதவர்கள் ஒரு தலைமை பதவிக்கு வருவது மட்டுமன்றி, தேசிய ரீதியில் ஆதிக்கம் செலுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
ஒரு சுதந்திர போராட்ட வீரராக தன்னுடைய பதினாறாவது வயதில் தன்னுடைய தேசத்தின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த இந்த வீரன், அன்றிலிருந்து தன் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பாடுபட்டார். அவருடைய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளும் நேர்மையும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது மட்டுமல்ல, ஒரு மக்கள் தலைவனாக உருவாக்கியது.  இன்றைய கால கட்டத்தில் பல வழிகளில் மக்கள் தலைவர்களாக வர விரும்பி பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கருப்பு காந்தி , பெருந்தலைவர், கல்வியின் தந்தை  என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட காமராஜர் அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  ஒரு சுதந்திர போராட்ட வீரனாக, ஒரு சிறந்த அரசியல் தலைவனாக, ஒரு சமூக சேவகராக, ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தி காட்டிய தமிழ் நாட்டின் முதலமைச்சராக, நேர்மையும் மனிதாபிமானமும் வாழ்வில் கொண்ட ஒரு நல்ல மனிதனாக பல்வேறு முகங்களை கொண்ட இந்த படிக்காத தமிழ் மேதை பற்றி தமிழர் அனைவரும் அறிந்து வேண்டும்.
கவிதை வானில் கவிமன்றம் புதுச்சேரி மற்றும் சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118, வது பிறந்த நாளை முன்னிட்டு இணையவழி உலக சாதனை நிகழ்வு ஜூலை 16, ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடை பெற இருக்கிறது. இம்மூன்று நாட்களும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் வரலாறு, அரசியல் பணி, சமூகப் பணி, தலைமைத்துவ பண்பு, துணிவு, கல்வி பணி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நிகழ்வுகள் நடை பெற இருக்கின்றன. அனைவரும் இணைய வழி ஊடாக இணைந்து ஆதரவளிப்பதுடன், அவரைப் பற்றிய வரலாறை அடுத்த தலைமுறைக்கு  கடத்த முன் வாருங்கள்.  Meeting ID: 879 0083 5801  Passcode: 811253

canada2canada1

News

Read Previous

இணையத் தொழிற்சாலையின் கூலியற்ற தொழிலாளர்களா நாம்?

Read Next

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published.