தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

Vinkmag ad

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறையுடன் இணைந்து மெகா வேலை வாய்ப்பு முகாம்களை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறது.

பல லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். ‘ஸ்டடி சென்டர்’ எனும் மையங்களை உருவாக்கி போட்டித் தேர்வுகளுக்குச் செல்வோருக்கு உதவுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையம் (Student Advisory Bureau),

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம்,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் கல்வி மையம்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் கோச்சிங் அகாடமி,

மதுரை மீனாட்சி கல்லூரியிலுள்ள அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கோச்சிங் சென்டர்,

சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள பெண்களுக்கான சிவில் சர்வீஸ் பயிற்சி மையம்,

பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்,

சென்னையில் தமிழ்நாடு அரசு உதவியுடன் இயங்கும் பின்ஸ்டியா, எப்.என்.எப் சென்டர் (கிண்டி) எனப் பலநூறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு உதவியுடன், தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தந்துகொண்டிருக்கின்றன.

ENTREPRENEURSHIP DEVELOPMENT AND INNOVATION INSTITUTE

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
.இங்கு நிறைய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வேலை பெறவும், தொழில் தொடங்கவும் உதவுகிறார்கள்.

தொடர்புக்கு: www.editn.in

TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION

பயிற்சி

சென்னை கிண்டியில் இந்த வாரியம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாடு முழுவதுமுள்ள தரமான திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அங்கீகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு வேலையும் வாங்கித் தருகிறது.

வேலை கொடுப்போரை சந்திக்கவும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள்.

தொடர்புக்கு: https://www.tnskill.tn.gov.in/

COMMISSIONERATE OF INDUSTRIES AND COMMERCE
இத்துறையின் கீழ், சென்னை கிண்டியில் பாலிடெக்னிக் இயங்குகிறது.

விருத்தாச்சலத்தில் கண்ணாடி பீங்கான் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி,

கோவையில் பலவகை தொழில் பயிற்சிகள்,

கள்ளக்குறிச்சியில் மரவேலை சிற்பப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

பயிற்சி பெறுபவர்களுக்கு உடனுக்குடன் வேலையும் கிடைக்கிறது.

தொடர்புக்கு : www.indcom.tn.gov.in

TAMIL NADU KHADI AND VILLAGE INDUSTRIES BOARD

வேலை

சென்னை குறளகத்தில் இயங்குகிற, தமிழ்நாடு காதி கிராமத் தொழில் வாரியம்,

கிராமப்புறங்களில் பல துறைகளில் பல பயிற்சிகளை வழங்கிவருகிறது.

இதன் மூலம் பலர் வேலை பெற்றுள்ளனர்.

பலர் தொழில் தொடங்கியுள்ளனர்.

தொடர்புக்கு: www.tn.gov.in/hhtk/khadi/khadi-home.htm

POOMPUHAR

சிற்பம்

காதிகிராம நிறுவனமும் பூம்புகார் நிறுவனமும் இணைந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி,
கடன் மற்றும் மானியம் தருகின்றன.

தயாரித்த பொருள்களை விற்றும் தருகிறார்கள்.

தொடர்புக்கு : http://tnpoompuhar.org

வெளிநாட்டு வேலை

OVESEAS WORKERS RESOURCE CENTRE)

டெல்லி அருகேயுள்ள குர்கானில் உள்ளது இந்த நிறுவனம்.

வெளிநாட்டு வேலைபெற, இன்ஷூரன்ஸ் பெற, விசாவின் உண்மைத் தன்மையை விசாரிக்க,

சான்றிதழ் அட்ஜஸ்ட் செய்ய எனப் பல பணிகளைச் செய்கிறது.

இந்த நிறுவனத்தின் சென்னை கிளை எழிலகத்தில் உள்ளது.

தொடர்புக்கு: www.owrc.in/contact_us.html

வெளிநாடு

OVERSEAS MANPOWER CORPORATION LIMITED

பயிற்சி

சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருதல், சான்றிதழ் அட்டஸ்ட்டேஷன், இன்ஷூரன்ஸ், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் தொடர்புகொண்டு உதவி கோருதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

தொடர்புக்கு: www.omcmanpower.com

நன்றி விகடன்

News

Read Previous

காமராசர் பிறந்த நாள் உலக சாதனை நிகழ்வு

Read Next

விபத்து விழிப்புணர்வு கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *