விபத்து விழிப்புணர்வு கவிதை

Vinkmag ad

மைசூர் இரா.கர்ணன்

விபத்து விழிப்புணர்வு கவிதை

மனுசப் பிறவி அரிது என்றார் ஔவை பாட்டிடா..!

மனசில் கொஞ்சம் நினைத்தும் நீயும் வண்டி ஓட்டடா..!

போகும் இடம் சேர வேண்டும் நமது நோக்கமே..

நோகும் வாழ்வை தருவ தொன்றோ கவனக் குறைவேதான்..

வேகம் கொண்டு சாலைப் போகும் விரையும் இளைஞரே..!

வேண்டாம் போனில் பேசும் பழக்கம் ஓட்டும் வேளையிலே..

விபத்தை தரும் செயல் அதுவும் கவனக் குறைவாலே…

நேர்ந்த பின்னால் நினைத்து ஏங்கி என்ன ஆகுண்டா…

நினைத்துப் பாரு இப்ப கொஞ்சம் மனசில் நீயுண்டா..

ஊன மது பிறவி என்றால் உனது தப்பல்ல

உலகம் நிற்கும் துணை ஆகி அந்த வேளையில்,

விபத் தாகும் வினை யெல்லாம் மனிதன் தவறுதான்..

சமத் தான மனிதர் மட்டும் கணித்து வாழுவார்..

பொறுப் பற்ற மனிதர் குணம் வளர்ப்பு தந்ததே..

புரிந்து வாழும் பெற்றோர் பிள்ளை சிறந்து நிற்குமே..

பெற்ற மனம் உள்ள குணம் பிள்ளை சொந்தமே..

உற்ற சொந்தம் உணர வேண்டும் வளர்க்கும் வேளையில்,

விதி விலக்காய் சில விபத்து நேரும் இயற்கையால்,

மதி இழப்பார் தவறுகளே தரையில் உயிர் இழப்புகள்,

கடமைகளை உணர வைக்கும் நல்ல வளர்ப்பு பீள்ளைத்தான்

உடமைகளின் மதிப்பை உணர்ந்து நன்று உலகில் காணுவான்.

என் ஆய்வு அறிந்த ஒன்று வளர்ப்பு தவறுதான்..

இதை ஏற்க மனம் மறுக்கும் பெற்றோர் உண்டுதான்,

உண்மை ஒன்றே உரைப்ப தொன்றே எனது உள்ளமாம்..

உணரும் மனம் உயர்ந்து நின்று சிறக்க வாழ்த்துறேன்.

மைசூர் இரா.கர்ணன்
18.07 .2021

News

Read Previous

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

Read Next

தியாகம்

Leave a Reply

Your email address will not be published.