இயக்குனர் கிளாட் சாப்ரோலின் ஐந்து படங்கள் திரையிடல்

Vinkmag ad

இயக்குனர் கிளாட் சாப்ரோலின் ஐந்து படங்கள் திரையிடல்
**********************************************************************************

03-04-2017 முதல் 07-04-2017 வரை மாலை 6:30 மணிக்கு…

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சினிமா ரசனையின் மிக முக்கிய அங்கமான ரெட்ரோஸ்பெக்டிவ் என்ற தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. சென்ற வாரம் முழுக்க வூடி ஆலனின் படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் #Retrospective வரிசையில் திரையிடப்படும். ஒரு இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக அந்த இயக்குனர், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இயக்குனரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும். சினிமா சார்ந்து இயங்குபவர்கள், உதவி இயக்குனர்கள், மாணவர்கள், திரைப்பட பொது பார்வையாளர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது.

பிரான்ஸ் புதிய அலை இயக்கத்தின் மிக முக்கியமான இயக்குனரும், பிரான்சின் ஹிட்ச்காக் என்று அழைக்கப்படுபவருமான கிளாட் சாப்ரோல் திரில்லர் வகை படங்களை எடுப்பதில் தேர்ந்தவர். தமிழ்நாட்டில் புதிய அலை இயக்கத்தை சேர்ந்த மற்ற இயக்குனர்கள் பெரும்பாலும் அறியப்பட்டவர்கள். ஆனால் சாப்ரோல் போன்ற வெகுசிலரே இங்கே அதிகம் அறியப்படாத நிலையில் இது போன்ற ரெட்ரோஸ்பெக்டிவ் திரையிடல் முக்கியப்படுவம் பெறுகிறது.

அனைவரும் வருக….அனுமதி இலவசம்…

திரையிடப்படும் படங்களின் பட்டியல்.

03-04-2017 – திங்கள் – Les Bonnes Femmes (1960)

04-04-2017 – செவ்வாய் – La Rupture (1970)

05-04-2017 – புதன் – Alice ou la Dernière Fugue (1977)

06-04-2017 – வியாழன் – Une affaire de femmes (1988)

07-04-2017 – வெள்ளி – Bellamy (2009)

News

Read Previous

வெள்ளை நிற எழுத்துக்காரர்

Read Next

சங்கே முழங்கு !

Leave a Reply

Your email address will not be published.