ஹாஜி.கருத்த ராவுத்தர்

Vinkmag ad

ஹாஜி.கருத்த ராவுத்தர்

ஆங்கிலேய ஆட்சி காலம் விடுதலை சுடர் வரதராஜலு நாயுடு உத்தமபாளையம் தாலுகாவில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறார் .,வரதராஜலு ஆங்கில அரசிற்கு எதிராகவும் விடுதலை தீயை மக்கள் மனங்களில் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அளவிற்கு பேசுவார் என்பதால் அவரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் கைது செய்ய வேண்டும் என ஆங்கிலேய அடிமை காவல்துறை முடிவு செய்கிறது.,ஆனால் அவர்களின் கண்களில் மண்ணை தூவி வரதராஜலு நாயுடு இரவோடு இரவாக பண்ணைபுரம் வந்து தங்குகிறார்
மறுநாள் எப்படியும் பொதுக்கூட்டத்திற்கு வருவார் அல்லவா அங்கு கைது செய்யலாம் என காவல்துறை முடிவு செய்கிறது .,பொதுக்கூட்டத்தில் காவல்துறை குவிக்கப்படுகிறது எதிர்பார்த்தது போலவே வரதராஜலு வந்தார் மேடை ஏறினார் அனல் பறக்கும்படி பேசினார் ஆனால் காவல்துறை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தது .காரணம் அந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஹாஜி கருத்த ராவுத்தர்.,அவரை தாண்டி வரதராஜலு நாயுடுவை கைது செய்ய காவல்துறையே அஞ்சினர்., பொதுக்கூட்டம் முடிந்து வீரபாண்டியை கடந்து வந்த பின்புதான் வரதராஜலு நாயுடுவை காவல்துறையால் கைது செய்ய முடிந்தது அந்த அளவிற்கு மக்களின் அன்பையும் ஆங்கிலேய காவல்துறைக்கு சிம்மசொப்பனமாகவும் இருந்தவர் விடுதலை போராட்ட வீரர் கருத்த ராவுத்தர்.,
தென் மாநிலத்தில் அன்றைய காலக்கட்டத்தில் கல்லூரி படிப்பை பெற வேண்டும் என்றால் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குத்தான் சென்று படிக்க வேண்டும்.,பொருளாதார வசதியற்றவர்களால் அது சாத்தியமற்ற எட்டா கனியாக இருந்த சமயத்தில் உத்தமபாளையத்தில் தனது சொந்த செலவில் கல்லூரியை துவக்கியவர்.,அந்த கல்லூரி மட்டும் இல்லையென்றால் பலரின் கல்லூரி கனவு கனவாகவே இருந்திருக்கும்.,அதோடு தான் கல்லூரி துவங்கியதோடு நில்லாமல் வாணியம்பாடி கல்லூரி திருச்சி ஜமால் கல்லூரி துவங்குவதற்கும் பொருளாதார உதவியும் செய்தார்..உத்தமபாளையம் அரசு மருத்துவனை,அலுவலகம்,பள்ளிக்கூடம் என அனைத்தும் இயங்குவது இவர் கொடுத்த இடங்களே.,இவ்வாறு சுதந்திர போராட்ட வீரர் கல்வி தந்தை வள்ளல் என வாழ்ந்த ஹாஜி கருத்த ராவுத்தர் #நினைவுநாள் இன்று.
(தகவல்கள் பேராசிரியர் அப்துல் சமது எழுதிய தியாகத்தின் நிறம் பச்சை என்ற புத்தகத்தில் படித்தது)

News

Read Previous

எதையாச்சும் பேசுவோம்

Read Next

இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் (அறிமுகக் களக்கையேடு)

Leave a Reply

Your email address will not be published.