ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

Vinkmag ad

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா :
ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்
இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்
மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச் சுடர்
திப்பு சுல்தான் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தொடக்கமாக இறைவசனங்களை ஓதினார்.
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார்.
முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர்
முனைவர் பீ.மு. மன்சூர், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முஹம்மது முகைதீன்,
டீபா தலைவர் டாக்டர் பால் பிரபாகர், இந்தியர் நலவாழ்வு பேரவையின்
அமீரக துணைத் தலைவர் ஏ.எஸ். இப்ராஹிம், ஷார்ஜா இந்திய சங்க
தலைவர் வழக்கறிஞர் ரஹீம், எஸ்.எஸ். ஷாஜஹான், சொரிப்பாறைப்பட்டி
ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் நூலாய்வுரை நிகழ்த்தினர்.
அவர்கள் இந்திய விடுதலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான்
என புகழாரம் சூட்டினர்.

தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூலை முனைவர் பீ. மு. மன்சூர் வெளியிட முதல் பிரதியை
ஏ. முஹம்மது மஃரூப் பெற்றுக் கொண்டார்.

பன்னூலாசிரியர் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது ஏற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் தொழிலதிபர் முஹம்மது ஷர்புதீன், வி.களத்தூர் உமர் ஃபாரூக்,
முஸ்தபா, முனைவர் ரோஹினி, முஹம்மது மீரான், மன்னர் மன்னன்,
உஸ்மான், பேரளம் நவாசுதீன், கட்டுமாவடி முஹம்மது ஃபைசல்,
லெப்பைக்குடிக்காடு சமியுல்லா, பள்ளபட்டி நசீர் அகமது
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர். மேலும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
ஈரோடு சாஜித் நன்றியுரை நிகழ்த்தினார்.

News

Read Previous

உலகமே உணரட்டும்!

Read Next

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

Leave a Reply

Your email address will not be published.