ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

Vinkmag ad

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

ஷார்ஜா : 
ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் தமிழ் மொழியாக்கத்தின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது.
தொடக்கமாக  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர் சங்க நிர்வாகி திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார்.பஹீமிய்யா டிரஸ்டின் ஜலாலுத்தீன் மற்றும் கலீபா முஸ்தபா ஆகியோர்  இறைஞானப் பாடலை பாடினார். 
இந்த விழாவுக்கு மஸ்னவியின் காதலர், முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார்.  அவர் தனது உரையில் 
மஸ்னவி ஷரீப் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி  ரஹ்மத்துல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களால் 12 ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் இயற்றப்பட்டது ஆகும். இந்த நூலை தமிழில் நரியம்பட்டு எம்.ஏ. ஸலாம் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.இந்த நூலை சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள ஃபஹீமிய்யா டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. 
மஸ்னவி என்பதற்கு ஈரடி அர்த்தம் என பொருள்படும். இரண்டு வரிகளில் கவிதை மூலம் 
குர் ஆன், ஹதீஸ், தத்துவம், கதை, ஆன்மிகம், வரலாறு,   உதாரணம், விளக்கம், நாடகம்உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.  பல்வேறுஞான அகமியங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.  குறிப்பாக கவிக்கோ அப்துல் ரஹ்மான்அவர்களது பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி நடப்பது சிறப்புக்குரியது என்றார். 
இந்த நூலை முஹம்மது மஃரூப் வெளியிட  இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புத்தக வெளியீட்டுத்துறையின் மேலாளர் சஞ்சய் கோஸ் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதனையடுத்து புதுக்கோட்டை காதர் ஹுசைன், காயல் மீரான் மூசா, கிரீன் குளோப் ஜாஸ்மின் அபுபக்கர், கவிஞர் கவிதா சோலையப்பன், ஏகத்துவ மெய்ஞான சபையின் கலிபா முஸ்தபா, இளையான்குடி செய்யது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர். 
விழாவில் கலந்து கொண்ட இந்திய அரசு வர்த்தகத்துறையின் அதிகாரி சுனில் குமார்பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.  முஹம்மது மஃரூப்புக்கு இளையான்கு அபுதாஹிர்பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
இந்த விழாவில் காயல் யஹ்யா முஹ்யித்தீன், திருச்சி இம்மானுவேல், முதுவை இம்தாதுல்லா,காயல் குத்புதீன்,  இளையான்குடி இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

News

Read Previous

தொன்மத்தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

Read Next

மாவீரன் திப்பு சுல்தான்

Leave a Reply

Your email address will not be published.