வாசல் கோலம்

Vinkmag ad

மைசூர் இரா.கர்ணன்

சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

தலைப்பு :
வாசல் கோலம்

       கவிதை.

பார் போற்றும் பண்பாடு தமிழ் நாடெங்கும் காணுதின்று..,

வேர் போன்ற முன்னோர்கள் விளக்கிச் சென்ற நன்நெறிகள்..,

ஊர் எங்கும் காணுதே..! உவகை யெல்லாம் கூட்டுதே..!

வசந்த கால வாசல் கோலம் மண் மணக்குதே..

உயர்ந்த இனம் தமிழர் என்ற நிலையும் உயருதே..!

கோலம் இட்டு சாணி மேலே பூவை நட்டு

வாசல் கவருதே..! வாஞ்சை மனம் சிறந்து காணுதே..!

திங்கள் எல்லாம் பகுத்து வைத்த சிறந்த குலமிது..,

எங்கள் தமிழ் இனமே சிறந்ததென்று உலகம் சொல்லுது..!

வாழும் மண்ணும் சூழ் நிலையால் மாறிப் போகலாம்..,

வாழும் இடம் தூரமாக நமக்கு இயற்கை அமைக்கலாம்,

கற்றநெறி உலகம் வாழ்த்தும் நல்ல பண்பு என்பதால்..

மறந் திடாமல் நாமும் அதைப் போற்றி வளர்க்கணும்..

மனதினிலே கட்டிக் காக்கும் உறுதி கொள்ளனும்.

நாளை வரும் தலைமுறையும் நன்கு தெரிந்து வாழணும்..

நாமும் அதை செம்மையாக அவர்களுக்கு சொல்லிச் செல்லணும்.🙏

மைசூர் இரா.கர்ணன்
24 .12 .2021

News

Read Previous

தேசிய உழவர் தினம்

Read Next

கண்ணாடி

Leave a Reply

Your email address will not be published.