புதுடெல்லியில் நடந் த விழாவில் தமிழக இளைஞருக்கு ‘சிறந்த மென்பொருள் கட்டுமான பொறியாளர்’ விருது

Vinkmag ad

புதுடெல்லியில் நடந் த விழாவில் தமிழக இளைஞருக்கு ‘சிறந்த மென்பொருள் கட்டுமான பொறியாளர்’ விருது

புதுடெல்லி :

புதுடெல்லியில் “குளோபல் எம்பயர் ஈவென்ட்ஸ்” என்ற அமைப்பின் சார்பில்  “ஐகான்ஸ் ஆப் ஆசியா 2022” விருது வழங்கும் விழா நடந்தது.

 இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூரைச் சேர்ந்த  அசன் முஹம்மதுவுக்கு  “சிறந்த மென்பொருள் கட்டுமான பொறியாளர் 2022” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இந்த பிரிவில் போட்டியிட்ட ஆசிய கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த 38 நபர்களில் சிறந்த நபராக அசன் முஹம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தபடுகிறது.  கல்வி, தொழில், பொது தொண்டில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த வருடம் டெல்லி துவாரகாவில் உள்ள “ரேடிஸ்ஸன் ப்ளூ” ஹோட்டலில் இந்த விழா சிறந்த முறையில் நடந்தது.

விருது பெற்ற அசன் முஹம்மது  தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியை  உரித்தாக்கினார். முக்கியமாக தனது பொறியியல் கல்லூரி படிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்ய தனது உடல் உழைப்பையும் நேரத்தயும் செலவிட்டு கல்லூரி கட்டணத்தை செலுத்த உதவிய  அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.

 அவருடைய சாதனை மென்மேலும் தொடர பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News

Read Previous

பணிவே பண்பானது !

Read Next

    எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.