பரபரப்பில் தலைமை செயலகம்

Vinkmag ad

பரபரப்பில் தலைமை செயலகம்

டிஜிபி- தலைமை செயலாளர் அடுத்து யாரு

ஸ்டாலினின் மெஹா அசைன் மெண்ட்?
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்கிற பரபரப்பில் முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப போகும் அந்த அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருக்கிறாராம்.

கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.

அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இணைந்து உள்ளார். இவர் 1992 தமிழ்நாடு பேச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இணைந்துள்ளார்
டிஜிபி
இன்னொரு பக்கம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இந்த மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய டிஜிபிக்களுக்கான லிஸ்டை ஏற்கனவே தமிழ்நாடு அரசு உருவாக்கிவிட்டது.
அதன்படி சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்று உள்ளதாம். இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. இதையடுத்து டெல்லியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
விரைவில் இந்த லிஸ்டில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதில் இருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக பணிகளில் பல ஆர்எஸ்எஸ் ஆட்கள், பாஜக ஆட்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். இவர்கள்தான் தற்போது இருக்கும் ஆட்சியை பற்றிய சீக்ரெட்டுகளை வெளியே சொல்லி வருகிறார்கள். பல முக்கியமான விஷயங்கள் வெளியே கசிவது இவர்கள் மூலம்தான் என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையா இது போன்ற நிர்வாகிகளை அடையாளம் கண்டு தூக்கும் பணியில் இறங்கி உள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்தது இரண்டு வருடம் ஆகியும் ஸ்டாலின் இந்த நடவடிக்கைகளை எடுக்காத நிலையில்.. புதிய டிஜிபி மூலம் போலீஸ் துறையில் , உள்துறையில் இருக்கும் இது போன்ற வலதுசாரி சார்பு அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நடக்குமா கவர்னர் என்ன செய்யப்போகிறார் என பல விவாதங்கள் அதிகாரிகள் மத்தியில் நடக்கிறது பார்ப்போம் அடுத்து என்ன என்று.

News

Read Previous

கைலி ஒரு விடுதலை

Read Next

தேரிருவேலியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு

Leave a Reply

Your email address will not be published.