பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

Vinkmag ad

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

புதுடெல்லி :

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் ஹாரூண் பாஷா கூறியிருப்பதாவது  :

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டியானது பங்களாதேஷ் நாட்டின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் 100 வது பிறந்த நாளையொட்டி நடக்க இருக்கிறது.

இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,  பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர் ந் த அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியானது அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மாதம் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

ஷார்ஜாவில் நடந் த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட்ட அப்பாஸ் அலி இந் த போட்டிக்கான துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இது குறித்து அப்பாஸ் அலி கூறியிருப்பதாவது :

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக என்னை நியமனம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட அப்பாஸ் அலிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்களை தெரிவிக்க : +91 78454 66866

News

Read Previous

திப்பு சுல்தான்

Read Next

விடியாத பகல்

Leave a Reply

Your email address will not be published.