நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

Vinkmag ad

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு“மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் விதமாக நெல்லை அரசு அருங்காட்சியகமும் நெல்லை கேன்சர் கேர் சென்டரும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளனர். இப்போட்டிகள் அக்டோபர் 26 ஆம் நாள் காலை 11 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.
6 முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போஸ்டர் தயாரித்தல் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் ஒரு முழு சார்ட்டில் புற்று நோயை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்கிற தலைப்பில் போஸ்டர் தயாரித்து போட்டி நடைபெறும் நாள் அன்று அருங்காட்சியகத்திற்கு எடுத்து வர வேண்டும்.

வகுப்பு 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு புற்றுநோயினை எதிர்த்து போராடுவோம் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது .மாணவர்கள் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். இப்போட்டிகளில் ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஐந்து மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் .

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் .
மேலும் விவரங்களுக்கு 7502433751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் திருமதி சிவ.சத்தியவள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News

Read Previous

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

Read Next

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published.