நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

Vinkmag ad

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்…………………….

குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன பழுது நீக்கும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது கடந்த 18 ஆண்டுகளாக குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக இலவச வாகன பழுது நீக்குதல் செய்து கொண்டிருக்கிறோம் இந்த கோடை காலங்களில் உதகை சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்கள் ஏதேனும் வழியில் பழுதாகி நின்றால் உடனடியாக குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக இருக்கும் இடத்திற்கு சென்று வாகனங்களை இலவசமாக வாகனங்களை பழுத நீக்கி கொடுத்து வருகிறோம் அவர்களிடமிருந்து எந்த பணமோ நன்கொடையோ வாங்குவதில்லை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதற்காக நீலகிரி மாவட்ட காவல்துறை குன்னூர் காவல் உட்கோட்டம் குன்னூர் காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்படுகிறது இதில் அவசர தேவைக்காக இலவச செல் எண் வழங்கப்பட்டுள்ளது இதற்காக குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் தலைவர் திரு ராஜேஷ் அவர்கள்ஹேன்குமார் பொதுச் செயலாளர் பொருளாளர் திரு ஜெயேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வெலிங்டன் பகுதிக்குபாலன் ஒரு குழுவாகவும் குன்னூர் நகரப்பகுதிக்கு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு குழுவாகவும் எலநெல்லி பகுதிக்கு திரு சதீஷ்குமார் ராஜேஷ் அவர்கள் தலைமையில் ஒரு குழுவாகவும் சிம்ஸ் பார்க் பகுதிக்கு திருத்துவராஜ் அவர்கள் தலைமையில் ஒரு குழுவாகவும் பரலியார் பகுதிக்கு திரு செல்வா அவர்கள் ஒரு குழுவாகவும் மரப்பாலம் பகுதிக்கு சங்கர் அவர்கள் ஒரு குழுவாகவும் மரப்பால பகுதிக்கு திரு சுந்தர் அவர்கள் ஒரு குழுவாகவும் அமைக்கப்பட்டுள்ளது கீழே உள்ள இரண்டு 7598841420// 9865467681 எண்களில் தொடர்பு கொண்டு அழைத்தால் பயனடையலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

News

Read Previous

வரலாற்றின் பக்கத்தில் ஒருநாள்…!

Read Next

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் 2022-23

Leave a Reply

Your email address will not be published.