துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

Vinkmag ad

துபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி

இலங்கை மார்க்க அறிஞ்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

துபாய் :
துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டுகள் துறையின் அனுமதியுடன்
மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் செண்டரில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

மௌலவி ஷேக் அப்துல்லா நூரி இறைவசனங்களை ஓதினார்.
கீழக்கரை பி.ஆர்.எல். முகம்மது சலீம் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மர்கஸ் சகாஃபி செண்டர் நமக்கு வழங்கியுள்ள இத்தகைய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தமிழ் மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். லேண்ட்மார்க் ஓட்டல் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா முன்னிலை வகித்தார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இஸ்ரா வல் மிஃராஜ் வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்தார். சிறப்பு சொற்பொழிவாளர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் சிற்றுரை நிகழ்த்தினார். மர்கஸின் பணிகள் குறித்து சயீத் நூரானி, நோஃபல் நூரானி ஆகியோர் உரை நிகழ்த்தினர். திண்டுக்கல் ஜமால் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.
மர்கஸ் மதரஸாவின் முதல்வர் அப்துல் சலாம் சகாபி மற்றும் அதிரை அப்துல்லா ஹஜ்ரத் ஆகியோர் துஆ ஓதினார்.
விழாவில் ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான், அமீரக காயிதேமில்லத் பேரவையின் நிர்வாகிகள் பரக்கத் அலி, முஹம்மது காமில், இஸ்மாயில் காக்கா, சாகுல், லத்தீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாஅத் முப்பெரும் விழா

Read Next

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

Leave a Reply

Your email address will not be published.