துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

Vinkmag ad
துபாய் : துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி 28.06.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை அட்லாண்டிஸ் ந‌ட்ச‌த்திர‌ ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து.
நிக‌ழ்வில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் சுபோத் காந்த் ச‌ஹாய் ப‌ங்கேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ சுற்றுலாத்துறை ம‌த்திய‌ கிழ‌க்கில் இருந்து வ‌ரும் ப‌ய‌ணிக‌ளை அதிக‌ அள‌வில் க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து. குறிப்பாக‌ ம‌ருத்துவ‌த்துவ‌த்திற்காக‌ வ‌ரும் ப‌ய‌ணிக‌ள‌து எண்ணிக்கையும் அதிக‌ரித்து வ‌ருகிற‌து.
ஐரோப்பா உள்ளிட்ட‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளை ம‌ட்டுமே த‌ங்க‌ள‌து ஓய்விற்காக‌ சென்று வ‌ந்த‌ ம‌த்திய‌ கிழ‌க்கு ம‌ற்றும் வ‌ளைகுடா ம‌க்க‌ளின் பார்வை இந்தியாவின் மீது அதிக‌ரித்து வ‌ருகிற‌து. இத‌னை க‌ருத்தில் கொண்டு இந்தியாவெங்கும் இர‌ண்டு இல‌ட்ச‌த்திற்கும் அதிகமான‌ த‌ங்கும் அறைக‌ளை ஏற்ப‌டுத்திடும் முய‌ற்சியில் இந்திய‌ சுற்றுலாத்துறை ஈடுப‌ட்டுள்ள‌து. இது குறித்து மாநில‌ அர‌சுக‌ளிட‌மும் பேச்சுவார்த்தை ந‌டைபெறுவ‌த‌ற்குரிய‌ முய‌ற்சியும் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.
இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ருட‌ன், ஜார்க‌ண்ட் மாநில‌ சுற்றுலா அமைச்ச‌ர், உய‌ர் அதிகாரிக‌ள், டிராவ‌ல்ஸ் நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இக்குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌ர். இஸ்ரேல் ம‌ற்றும் ஜோர்டான் நாடுக‌ளுக்கு சுற்றுலாத்துறை குறித்த‌ நிக‌ழ்வுக‌ளுக்கு சென்ற‌ பின்ன‌ர் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் வ‌ந்த‌ன‌ர்.
இந்திய பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இக்கூட்ட‌த்தில் அமீர‌க‌ உய‌ர் அதிகாரிக‌ள், இந்திய தூதர் எம்.கே.லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா உள்ளிட்ட பலர் ப‌ங்கேற்ற‌ன‌ர். அத‌னைத் தொட‌ர்ந்து ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பு ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்வு இந்திய‌ சுற்றுலாத்துறையின் ம‌த்திய‌ கிழ‌க்கு பிராந்திய‌ அலுவ‌ல‌க‌ம், இந்திய‌ன் அசோஷியேஷ‌ன் ஆஃப் டூர் ஆப‌ரேட்ட‌ர்ஸ், இந்திய‌ அர‌சின் சுற்றுலா அமைச்ச‌க‌ம் ஆகிய‌வ‌ற்றின் ஆத‌ர‌வுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.
More Photos
http://www.facebook.com/media/set/?set=a.4160771416732.177764.1207444085&type=3&l=97b2e99723

News

Read Previous

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

Read Next

அறிவை வளர்க்க சில வழிகள்

Leave a Reply

Your email address will not be published.