திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

Vinkmag ad

ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு

அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது.  தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறுபட்ட இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில், சுமார் 11,000 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

ஜமால் முஹம்மது கல்லூரி  நிர்வாகக்குழு செயலரும் தாளாளருமாகிய ஏ. கே. காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்களின் அயராத 25 ஆண்டு கால உயர்கல்விச் சேவையையும் சாதனைகளையும் பாராட்டி, சென்ற புதன்கிழமை 18-07-2012 அன்று கொடைக்கானலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் “முனைவர் பட்டம்” வழங்கிச் சிறப்பித்தது. பிரசித்திப்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான முனைவர் செல்வின் குமார் முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

இக்கல்லூரி பற்றிய மேல் விவரங்களை,  இணையத்தில் www.jmc.edu  என்ற முகவரியில் காணலாம்.

******

செய்தி: சங்கத் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர்

________________________________________________________________

JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION (SINGAPORE CHAPTER)

100 JALAN SULTAN #09-07 SULTAN PLAZA, SINGAPORE 199001

Tel: (65) 63981020 Fax: (65) 63981030 Email: contact@jmcalumni.org.sg

Website: www.jmcalumni.org.sg  UEN No.: T10SS0160K

News

Read Previous

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

Read Next

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *