தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து

Vinkmag ad

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து

பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியது

சென்னை :

தமிழ்நாடு அரசால் ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜுலை மாதம்  தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) விதிப்படி, 12B அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் நிதி உதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும்.

அவ்வகையில் 12B அந்தஸ்தினை பெறுவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2020- ஆம் ஆண்டு உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக்குழுவினால்(UGC) கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு UGC- யின் 551-வது நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு,  12B அந்தஸ்தினை வழங்கி UGC-யின் 12B அந்தஸ்து வழங்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தினை சேர்த்துள்ளது .

இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும்,  அதனைப் பெறுவதற்கு, அனுமதி வழங்கி ஊக்கம் அளித்த  இப்பல்கலைக்கழகத்தின் மாண்புமிகு வேந்தர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு இணைவேந்தர்,  மதிப்பிற்குரிய உயர்கல்வித்துறை செயலர், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் தங்களது சீரிய பங்களிப்பினை வழங்கிய மாண்பமை துணைவேந்தர், உயர்திரு பதிவாளர், மதிப்புமிகு புலமுதல்வர், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், அலுவலக நண்பர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து இணைவுப்பெற்ற கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்த அனைவருக்கும்  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்    தனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.        

                                  மேலும், 12B அந்தஸ்தினை பெற்றதின் பயனாக,  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு இனிவரும் காலங்களில் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர்கல்வியை ஊக்குவிக்கும் நாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நிதிஉதவி மற்றும் புதிய கல்விசார் திட்டங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.     

வாழ்த்து

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு 12 பி அந் தஸ்து வழங்கியதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினருக்கு கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News

Read Previous

உயர் கல்வி உதவித் திட்டம் – 2021

Read Next

அன்பைப் பொழிய……

Leave a Reply

Your email address will not be published.