சொற்கள்

Vinkmag ad

சொற்கள்

பற்களே!
சொற்களை கவனியுங்கள்

பேசுவதற்குத்தான் சொற்கள்
வீசுவதற்கு அல்ல!

காயங்களை கேளுங்கள்
கற்களைக் கூட மன்னிக்கும்
சொற்களை அல்ல!

பற்களே!
ஆவி போவதற்குள்
சாவியைத் தேடுங்கள்
இதயக் கதவுகளை
இன்சொலால் திறக்க!

பற்களே!
நாவிடம் சொல்லுங்கள்
பூவிடம் கற்றுக் கொள்ள!

உறவு பிரிந்ததும்
நட்பு முறிந்ததும்
சொற்களால்தானே!

பற்களே!
சொற்களை கவனியுங்கள்

  • முனைவர் மு. அ. காதர்
    சிங்கப்பூர்

News

Read Previous

கூட்டு முயற்சி

Read Next

அன்புள்ள இளைஞனுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *