சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

Vinkmag ad

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும்  இணைந்து, சனிக்கிழமை 16-03-2024 அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது.

தொடர்பு  தகவல் அமைச்சு மற்றும் தேசிய  வளர்ச்சி அமைச்சின்  மூத்த  துணை  அமைச்சர்  திரு டான் கியெட் ஹெள சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரது சிறப்புரையில், “சிங்கப்பூரில் சமய இன நல்லிணக்கம் தொடர்ந்து மேம்படுவதும், நாம்  ஒன்றுபட்ட சமூகமாக திகழ்வதும் மிகவும் அவசியம்” என்று  குறிப்பிட்டதோடு, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த  14 ஆண்டுகளில் 134 நிகழ்ச்சிகளை செய்து முடித்திருப்பதை அமைச்சர் பாராட்டினார்.

கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளை சிங்கப்பூரில் ஆற்றி வரும் இச்சங்கம், நாம் புரிந்துணர்வோடு ஒன்றுபட்ட சமூகமாக தொடர்ந்து திகழவேண்டும் என்ற உயரிய நோக்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக சங்கத்தின் தலைவர், முனைவர் மு. அ. காதர் அவரது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

பென்கூலன் பள்ளிவாசல் பரிந்துரை செய்த 10 மாணவர்களுக்கு, எழுது பொருட்களை  நன்கொடையாக இச்சங்கம் வழங்கியது.

பென்கூலன் பள்ளிவாசலின் உஸ்தாத் மௌலவி கலீல் அஹமது ஹசனி, நோன்பின் மாண்புகளைப் பற்றி தனது உரையில் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளின் சமூகத் தலைவர்கள், பல இன மக்கள், மாணவர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 250 பேர் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

சங்கத்தின் மதியுரைஞர் ஹாஜி அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, பென்கூலன் பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக்  நினைவுப் பரிசு வழங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் திரு கலந்தர் மொஹிதீன் இந்நிகழ்ச்சியை வழி நடத்தினார். 

News

Read Previous

துபாய் : வேலைவாய்ப்பு

Read Next

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.