சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

Vinkmag ad

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

துபாய் :

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞர் மௌலவி அஹில் முஹம்மதுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இலங்கையைச் சேர்ந் த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியைச் சேர்ந் த இவர்  ஆன்மீகம், இலக்கியம்,  சமூகப் பணிகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் இணைய வழியில் சர்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்குகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் நிகழ்ச்சி 118 மணி நேரம் தொடர் நிகழ்வாக நடந் தது. இந் த நிகழ்வில் பங்கேற்று அந்த எளிய தலைவரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பாராட்டைப் பெற்றார்.

குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந் த ஒரு தலைவர் குறித்து அனைவரும் பாராட்டும் வகையில் தனது கருத்துக்களை பதிவு செய்தார். இதன் காரணமாக  ‘இந்தியா பிரைட்’  என்ற  சாதனை சான்றிதழை பெற்றுள்ளார்.

இதே போல் நோபிள் உலக சாதனை சான்றிதழையும் பெற்றுள்ளார். மேலும் துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் நடந் த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘இஸ்லாத்தில் இளைஞரின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

தொடர்ந் து சமூக, இலக்கிய, சமுதாய பங்களிப்பில் தன்னை ஈடுபடுத்தி வரும் அஹில் முஹம்மதுவுக்கு உலக தமிழர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

News

Read Previous

சஜ்தாவில் வீழ்வோம்!

Read Next

வேர்கள் : என்றும் வாழும் உமர்

Leave a Reply

Your email address will not be published.