கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

Vinkmag ad

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

தோஹா :

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சிக்கந்தர் ஹுசைன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். இந் த சந் திப்பு நிகழ்ச்சியின் மூலம் தாயகத்தில் பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

ஷேக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக கீழக்கரையின் பிரபல நூல் ஆய்வாளர் எஸ். மஹ்மூது நெய்னா கலந்து கொண்டார். அவர் இந்த ஜமாஅத் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இத்தகைய சந்திப்பு மூலம் தாயகத்தில் சமூக நலனுக்கான பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் சிறப்பு                  விருந்தினருக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரோஸ், யூசுஃப் நத்தர், யூசுஃப் இஸ்லாம், தப்ரெஸ், தன்சிப், ஹிதாயத்துல்லா, நூருல் அமீன், ஷேக் அப்துல் காதர், ஹாமித் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

News

Read Previous

பத்ர் போர் தந்த பாடம்

Read Next

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

Leave a Reply

Your email address will not be published.