உலக தற்கொலை தடுப்பு தினம்

Vinkmag ad

உலக தற்கொலை

தடுப்பு தினம்

சிறுவயதில் கீழச்சிறுபோதில் திருமதி பேச்சி அம்மாயி ஒரு சிறு தன் மானப் பிரச்சனைக்காக பூச்சி மருந்தை உண்டு இறந்தார்.

என் மத்திய வயதில்
நான்கு மகள்களின்
தகப்பன் ஒருவர் பிள்ளைகளின் திருமண செலவுகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது குமிழி மடை புளிய மரத்தில் ஊர் உறங்கும் நடு சாமத்தில் தூக்கில் தொங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 11 வகுப்பு படிக்கும் மாணவன் தன் படிப்பு தந்த மன அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் தன் வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு மின் விசிறியில் தூக்கிட்டான்.

மேற்சொன்ன தற்கொலைகள் அந்த குடும்பங்களில் தீர்வை தந்துள்ளனவா என்றால் இல்லை. மாறாக பிள்ளைகள் பெற்றோர்களின் வாழ்க்கையை கடினமாக பாதித்துள்ளது.

எனது வாழ்வில் 150 வீடுகளே உள்ள மிகச்சிறிய எனது கிராமத்தில் சீரான இடைவெளியில் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளது.

ஆண்டுக்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான தற்கொலைகள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள்தான் அதிகமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்ற எண்ணம் வரும்போதும்
( Altruistic suicide)

தன் மானம் பாதிக்கும் போதும்( Egoistic suicide)

தனிமையை உணரும் போதும் (Anomic suicide)

சிலரை பழிவாங்கவும்
( Revenge suicide)

மனிதர்கள் தற்கொலை செய்கின்றனர்.

தற்கொலை அறிகுறிகள்

  1. நம்பிக்கையின்றி பேசுவது
  2. யாரிடமும் சேராமல் தனித்து இருப்பது
  3. தூக்கமின்மை ( நடு இரவுக்கு பின்னர்)
  4. தன்னிடம் உள்ள பணம் சொத்துக்களை மற்றவர்களுக்கு உயில் எழுதி வைப்பது
  5. சிறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது
  6. மது அதிகமாக அருந்த ஆரம்பித்தால்
  7. வழக்கமான நடைமுறையில் மாற்றம்

தடுப்பது எப்படி

  1. தனித்துவிடாமல் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும்
  2. காரணங்களை கண்டறித்து அதை சரி செய்ய வேண்டும்
  3. தற்கொலை எண்ணம் ஒரு மன நோய். இது நிரந்தரமான நோயல்ல.

எனவே ஆரம்ப அறிகுறி நிலையில் தகுந்த மனநல மருத்துவரையும், மன நல ஆலோசகரையும் அணுகினால் தற்கொலை எண்ணத்திலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்

இன்று ( செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம்.
( Theme is : Creating hope through action)

நமது செயல்கள் மூலம் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இந்த சமூகத்தில் தற்கொலைகளை தடுக்கவேண்டும்.

தற்கொலைகள் பிரச்சனைகளுக்கு தீர்வல்ல…
அது பிரச்சனைகளின் ஆரம்பம்…

வாழ்க்கை இன்பம்
வாழ்தல் பேரின்பம்

பா. திருநாகலிங்க பாண்டியன்
M.Sc.,(Nursing) D.P.N
Madurai Medical College

News

Read Previous

காமன்வெல்த் சிறுகதை பரிசு

Read Next

பத்திரிகைப் பணி…

Leave a Reply

Your email address will not be published.