உயர்வான வாழ்க்கைக்கு….

Vinkmag ad

உயர்வான வாழ்க்கைக்கு..

ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்போது பையன் கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டான்.

அடிபட்டதுனால, ”ஆ..ஆ..ஆ..ஆ..ஆ” ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே ”.,

ஆ ஆ ஆ ஆ ஆ” சத்தம் திரும்பக் கேட்டுச்சு. 

பையன் சத்தம் வந்த திசையைப் பார்த்து,” நீ யார்” அப்படீன்னு கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கம் இருந்து ”நீ யார்” னு கேட்டுச்சு.

பையன் ” நீ ஒரு கோழை” அப்படீன்னு சொன்னான். அதே திரும்பக் கேட்டுச்சு. பையனுக்கு ஒரே ஆச்சரியம். அவங்க அப்பா கிட்டக் கேட்டான்.

” அது யாருப்பா, நான் சொல்றது எல்லாம் திரும்பச் சொல்றானே”  கேட்டான்.

அவங்க அப்பா சொன்னார் .அது யாரும் இல்லை. அது எதிரொலி. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று சொன்னார்.

மேலும் சொன்னார்,

” நீ என்ன எல்லாம் கொடுக்கறியோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும். 

உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உன் கிட்ட பழகின்றவர்களும் இருப்பார்கள்.. 

உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைத்தான் கொடுக்கும். 

நீ உன்னைச் சுத்தி இருக்கிறதை ரசித்தாய் என்றால் வாழ்க்கையும் ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும்” என்று சொன்னார்.,

ஆம்., நண்பர்களே.,

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும். கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும்.

எண்ணங்கள் செயல்களாகும். செயல்கள் பழக்கவழக்கங்களாகும்..பழக்க வழக்கங்களே, ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்.

எனவே மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்,

-உடுமலை சு.தண்டபாணி.*

News

Read Previous

கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

Read Next

அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை

Leave a Reply

Your email address will not be published.