இளையான்குடி வெற்றிப்படி அகடமி

Vinkmag ad

இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் படித்து முடித்திருக்கும் இளைஞர்களை, பெண்களை ஊக்கப்படுத்தி அரசுப் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக சில சமூக சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து தொடங்கி உள்ளது வெற்றிப்படி அகடமி. தற்போது 19 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாத வசதியில்லாத நான்கு மாணவர்களுக்கும், ஒரு மாணவிக்கும் ஆக 5 பேருக்கு குவைத் TIG அமைப்பு பயிற்சிக் கட்டணத்தை ஏற்று ஸ்பான்ஸர் செய்துள்ளது. இதற்கான முயற்சியை டைம் டிரஸ்ட் எடுத்தது.

இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் செயலர் மற்றும் டைம் டிரஸ்டின் நிறுவனர் ஹாஜி T.S.H. முசாபர் அப்துல் ரஹ்மான் குவைத் TIG அமைப்பு கொடுத்த கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

வெற்றிப்படி அகடமியில் மூன்று ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர் சம்பளம். வாடகை, மின்சாரக் கட்டணம் முதலியன கட்டுவதற்கு நிர்வாகத்தினர் மிகவும் சிரமம் அடைகின்றனர். பயிற்சி பெறும் பல மாணவர்களாலும் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளது.

நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட வெற்றிப்படி அகடமியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு பயிற்சிக் கட்டணத்தை வசதியுள்ளவர்கள் ஸ்பான்ஸர் செய்து ஏற்றுக் கொண்டால் நிர்வாகிகளுக்கு உதவியாக இருக்கும்.

News

Read Previous

உங்களுக்குத் தெரியாது தானே?!

Read Next

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *