இராமநாதபுரத்தில் போலீஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
நவாஸ் கனி எம்.பி. பங்கேற்பு

Vinkmag ad

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் அஹத் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான பாராட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 27.12.2021 திங்கட்கிழமை EMA அப்துல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி கலந்துகொண்டு வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய நவாஸ் கனி எம்.பி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் போலீஸ் துறை தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கான முயற்சியை மேற்கொண்ட அஹத் வெல்பேர் டிரஸ்டின் நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என்றார்.
HAWKS FITNESS CLUB நிறுவனர் ஹனீபா, மாணவர்களுக்கு போலீஸ் தேர்வுக்கான உடற்பயிற்சி குறித்த பயிற்சியினை சிறப்பான முறையில் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் ஜனாப். சலிமுல்லாஹ் கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, அஹத் வெல்பேர் டிரஸ்ட் தலைவர் Dr.F. நசார் அலி, MBBS, D.Ortho, செயலாளர் முகமது அசாருதீன்,MBA, மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், HAWKS FITNESS CLUB நிறுவனர் ஹனீபா, சித்தார்கோட்டை முஸ்லீம் தர்ம பரிபலான சபை மற்றும் சித்தார்கோட்டை கல்விப் பணிகள் குழு நிர்வாகிகள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

News

Read Previous

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்

Read Next

மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கும் வாசிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *