அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Vinkmag ad

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை*

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை பகுதியை சுற்றிலும் உள்ள பெரும்பாலான மில்களில் வேலைகளுக்கும், ஒட்டலில் மாஸ்டர், சப்ளையர் உள்ளிட்ட வேலைக்கும் வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.

பானிபூரி விற்பதில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக குடியேறி வருகின்றனர். கட்டுமான தொழில், இன்ஜினியர்கள், கட்டிட காண்ட்ராக்டர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்களிடம் பணிபுரிகின்றனர்.

பானிபூரி மற்றும் குல்பி ஐஸ் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். எனவே, வடமாநில தொழிலாளர்களின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, செல்போன் எண், தற்போது வேலைசெய்து வரும் நிறுவனத்தின் பெயர், தற்போதைய முகவரி ஆகியவற்றை நகராட்சி, தாலுகா அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றில் சமர்ப்பித்து பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பளம் வாங்குவதால் பல நிறுவனங்களில் இவர்களை வேலைக்கு நியமித்து வருகின்றனர். இவர்களை வேலைக்கு சேர்ப்பதால் நன்மையும் உள்ளது; தீமையும் உள்ளது. குடும்பத்தில் ஏதாவது பிரச்னை என்றால் யாருக்கும் தெரியாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து காலி செய்து விட்டு சென்று விடுகின்றனர்.

குறிப்பாக திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி சென்று விடுகின்றனர். வடமாநிலங்களில் இருந்து குடியேறியவர்களின் விபரங்கள் முன்னதாக சேகரிக்கப்படாததால், குற்றப்பின்னணி கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அதிக சிரமப்படுகின்றனர். எனவே, அருப்புக்கோட்டை பகுதியை சுற்றிலும் உள்ள வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று முறையாக போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய
அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின்
‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு…

Read Next

தேவிபட்டினம் புஹாரியா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட 34வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

Leave a Reply

Your email address will not be published.