மூத்த பத்திரிகையாளர் “இலட்டு” இக்பால் காலமானார்

Vinkmag ad

ilattu1மூத்த பத்திரிகையாளர் “இலட்டு”
திரு. இக்பால் காலமானார்*

ஆழ்ந்த இரங்கல் :

முரசொலி நாளிதழில் “செஞ்சி சிட்டி பாபு” என்ற பெயரில் பல ஆண்டுகள் பணிபுரிந்த வரும்,

இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர்

” இக்பால்” என்ற பெயரருடன்

சுமார்43 ஆண்டுகளாக

“இலட்டு” என்ற மாத பத்திரிகையை நடத்தி வந்தவருமான

திரு. இக்பால் அவர்களுக்கு

இன்று
02-01.2021) நள்ளிரவு
சுமார் 12-30மணி அளவில் ,
மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பலனின்றி காலமானார்

“நிச்சயமாக ஒவ்வொரு ஆன்மாவும், இறைவனிடமிருந்தே வருகிறது. மீண்டும் இறைவனிடமே மீள்கின்றன. ”

அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

—————————————-

கடந்த ஆண்டு இலட்டு பத்திரிகையின் 43 வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது அப்போது நாம் எழுதிய பதிவு
மீண்டும் பதிகிறோம்
——–02-01-2021—-

43 ஆண்டுகளாக தனி ஒரு மனிதராக சாதனை !

இலட்டு பத்திரிகை ஆசிரியருக்கு பாராட்டு!

“இலட்டு” என்ற பெயரில் தொடர்ந்து 42 ஆண்டுகளாகஒரு சிற்றிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது! இதன் ஆசிரியர் கு.இக்பால்.!!

செஞ்சி சிட்டிபாபு என்ற பெயருடன்
1966 ஆம் ஆண்டிலிருந்து 1972 வரை 6 ஆண்டு காலம்* கலைஞர் கருணாநிதியின் முரசொலி நாளிதழில் அச்சுக் கோர்ப்பவராக இதழியல் பணியைத் தொடங்கி பணியாற்றினார்.

முரசொலியில் கலைஞர் மற்றும் திமுக முன்னணி தலைவர்களின் கருத்துக்களை எழுத்துக் கோர்த்து எழுத்துக் கோர்த்து

திராவிட இயக்க கொள்கைகளின் மீது ஆழ்ந்த பற்றும் இறுக்கமான பிடிப்பும் கொண்டார்,

முரசொலி நாளிதழின் அன்றைய உதவி ஆசிரியர்களாகவும்,ஆசிரியர் குழுவிலும் பணியாற்றிய முரசொலி செல்வம் மதுரைபாண்டியன்,
அடியார், இருகூரான் ஆகியோரோடு நெருங்கி பழகி,
செய்திகள்,கட்டுரைகள், கவிதைகள் எழுத கற்றுகொண்டார்!

அதன்பிறகு

1972 இல் டாக்டர் ஏ.கே..ஜெய்னூதீன் என்பவர் நடத்திய ‘குவ்வத்” என்ற பத்திரிகையின் முதன்மை நிருபராக சில ஆண்டுள் இதழியல்பணியை தொடர்ந்து வந்தார்.

அந்த பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில், முஸ்லிம் தலைவர்கள் -பிரமுகர்கள் பலருடன் நெருங்கி பழகும் வாய்ப்பினை பெற்றார். அதன்விளைவாக இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு சிட்டிபாபு என்ற பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார்! !

குவ்வத் பத்திரிகை இடையிலேயே நின்றுவிடவே,

இதழியல் துறை மீதான தணியாத ஆர்வத்தின் காரணமாக

1977 ஆம் ஆண்டில்

எங்கள் மூலதனம் உழைப்பு! நாங்கள் எல்லோருக்கும் வழங்குவது இனிப்பு
என்ற முழக்கத்துடன்

இலட்டு என்ற பெயரில் மாத பத்திரிகையை சொந்தமாக நடத்த தொடங்கினார்

அன்று முதல் இன்று வரை இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ,
42 ஆண்டுகளாக இலட்டு” பத்திரிகையை
நடத்தி வருகிறார்.

இவ்வளவுக்கும்
அந்த பத்திரிகைக்கு எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் -சமுதாய அமைப்பின்- வணிக நிறுவனத்தின் பின்புலமோஒரு சிறிதும் இல்லை!

மேலும் ஆசிரியர் இக்பாலுக்கு பத்திரிகைத்துறையை தவிர வேறு எந்த தொழிலோ
பொருளாதார பின்னணியோ இல்லை.!

சொந்தமாக அலுவலகமோ,வாகனமோ ,ஏன் சைக்கிளோ கூட இல்லை

பெரும்பாலும்
எல்லா இடங்ளுக்கும் அரசு பேருந்திலோ,
இரயிலிலோ,..
காலநடையாக நடந்தோதான் சென்று வருகிறார்!

முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட உழைப்பை –பத்திரிகை சந்தாதாரர்களின் சந்தாக்களையும் ,
வணிக விளம்பர வருமானத்தையும் நம்பியே இவ்வளவு காலமும் இந்த பத்திரிகையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்!

பூந்திகளாய் சிதறாமல் இலட்டுவாய் இணைந்திருப்போம் என்ற முழக்கத்துடன் இப்போதும் வெளிவருகிறது!

இத்தகைய சிறப்புக்குரிய இலட்டு
இதழின் 43 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு,

இலட்டு சிறப்பிதழ் வெளியீடு மற்றும் இலட்டு இதழ் ஆசிரியர்.கு.இக்பால் அவர்களுக்கு பாராட்டு விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகம் அண்ணா அரங்கத்தில் 29.09.2019 நடைபெற்றது விழாவுக்கு தமிழறிஞர் பெருங்கவிக்கோ
வா.மு.சேதுராமன் தலைமைத் தாங்கினார்.

காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா தொடக்க உரை நிகழ்த்தினார்.

தமிழ்த்தேசிய சிந்தனையாளர் -. எழுகதிர் இதழ் ஆசிரியர் அருகோ,

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ,டி.கே.எஸ்.
இளங்கோவன்,

இ.யூ.மு.லீக் கட்சி நிர்வாகி கே.எம்.நிஜாம் ,
தொழிலதிபர் ஏஜிஏ.அகமது ரிபாய், பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர்
உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் இலட்டு ஆசிரியர் கு.இக்பால் ஏற்புரை நிகழ்த்தி நன்றி கூறினார்

விழாவுக்கான ஏற்பாடுகளை இரா.ஜெயசீலன்,
வெஸ்லி பிரபு
இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
—–+–+–+++++++
https://m.facebook.com/story.php?story_fbid=718914835239578&id=100013632037906
—————–

MGR TVஹமீது
இந்தியன் ஜர்னலிஸ்டு சர்வீஸ்
( IJS) அகடாமி 99410 86586

News

Read Previous

பாத்திமா அன்னை பாத்திமா

Read Next

‘2020 ன் டாப் 10 இளைஞர்கள்

Leave a Reply

Your email address will not be published.