பாத்திமா அன்னை பாத்திமா

Vinkmag ad

பாத்திமா அன்னை பாத்திமா
————————————–

அண்ணல் நபியின் ஆருயிரே பாத்திமா
அன்னை கதிஜாவின் அருந்தவமே பாத்திமா
அலிபுலியின் மனையாளே பாத்திமா அஸன் ஹுசைனின் ஆளுமையே பாத்திமா

பாத்திமா அன்னை பாத்திமா

ஏழைக்கும் திருடனுக்கும் பயணியர்க்கும் ஏழ்மையிலும் ஈந்தவரே பாத்திமா
வறுமையிலும் வந்த துன்பத்திலும்
வல்ல ரப்பை மறவாத மாமணியே பாத்திமா

பாத்திமா அன்னை பாத்திமா

தோல்துருத்தியில் தண்ணீர் சுமந்து
தோள்புஜத்தால் திருவை திரித்து
வடுக்களை ஏற்றுக்கொண்ட பாத்திமா உன்
வாழ்வே பெண்டிருக்கு பாடம் தானே பாத்திமா

பாத்திமா அன்னை பாத்திமா

துன்பத்தில் துவண்டாலும் பாத்திமா
துணிவே துணை என வாழ்ந்த பாத்திமா
உதவி ஆள் வேண்டி சென்ற பாத்திமா
உயர்வான துவாவை பெற்றுத் தந்த பாத்திமா

பாத்திமா அன்னை பாத்திமா

சொர்க்கத்தின் தலைவியே பாத்திமா சொக்கத்தங்க குணவதியே பாத்திமா
அண்ணல் பிரிவறிந்து அழுதவரே பாத்திமா
அடுத்து தானென அறிந்து மகிந்தவரே பாத்திமா

பாத்திமா அன்னை பாத்திமா

கவின் முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

புத்தாண்டே வருக !

Read Next

மூத்த பத்திரிகையாளர் “இலட்டு” இக்பால் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *