வேதம் தந்த மாதம் ———– மஆலி

Vinkmag ad

 

 

பிறை பிறந்தது – ரமளான்

முகம் மலர்ந்தது

 

தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில்

தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது

 

தலை தாழ்ந்தது – நெற்றி

தரை தொட்டது

 

நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு

இறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது

 

அலை ஓய்ந்தது – மனம்

அமைதியானது

 

தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனி

தூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது

 

பாதை புலர்ந்தது – அதில்

பயணம் தொடர்ந்தது

 

வேதவரியும் தூதர்மொழியும் துடுப்பானது – ஓடம்

விரைந்து செல்லும் இலக்கு மறுமை வெற்றியானது

 

மனதை வென்றிடு – மறுமைச்

சுவனம் வென்றெடு

 

விரும்புவதைத் துறப்பதுவே நோன்பென்பது – இறை

விருப்பப்படி வாழ்வதுவே தீன் என்பது

 

பசி தாகமே – நல்ல

பயிற்சி தந்தது

 

எளியோர்க்கு உணவளிக்கும் உணர்வு வந்தது – அது

ஏழைசிரிப்பில் இறைவனையே காணச் செய்தது

 

இறை வேதத்தை – தினம்

இரைந்தோதியே

 

கத்ரிரவுத் * தொழுகை நல்ல பயிற்சியானது – உளம்

கசிந்துருகி இறையருளை நாடி நின்றது

 

நிலா தேய்ந்தது – மாதம்

நிறைவடைந்தது

 

ஈகைத்திரு நாள் நினைவில் உளம் மகிழ்ந்தது – உலகம்

இஸ்லாத்தின் மகிமைகளை அறியலானது

 

வேதம் வந்தது – உலகம்

விழித்துக் கொண்டது

 

ஓதுவதைக் கடமையென உளமேற்றது – தினம்

ஓதியுரை அறியாமை இருளகன்றது

 

அழை என்பதும் – அதன்

ஆணைவுணர்ந்திடு

அழைப்பதிலே நபிவாழ்வு தியாகமானது – அதன்

அடிப்படையில் உழைத்து உலகை உய்வித்திடு

 

 

  • லைலத்துல் கத்ர் – குர்ஆன் அருளப்பட்ட மகத்தான இரவு

 

 

நன்றி :

 

சமரசம்

16 -31 ஆகஸ்ட் 2010

News

Read Previous

துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

Read Next

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *