வெள்ளையாடை ………….

Vinkmag ad

 

( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

வெள்ளையாடை மேனியிலே சுமந்து சென்றீரே !

வேதனையை மனதினிலே சகித்து நின்றீரே !

முல்லை, மல்லி மலர்களாகத் திரும்பி வந்தீரே !

மன்னவனின் அருள்நிறைந்து தினமும் வாழ்வீரே !

 

ஷைத்தானைக் கல்லெறிந்து துரத்தி வந்தீரே !

ஷரீஅத்தின் கடமையினை நிறைத்து விட்டீரே !

வைத்திருந்த ஈமானை ஜொலிக்க வைத்தீரே !

வாழ்வெல்லாம் ஷைத்தானைத் விரட்டி வாழ்வீரே !

 

ஜம்ஜம்மின் அருள்நீரை அருந்தி வந்தீரே !

சகலயின மக்களோடு பொருந்தி நின்றீரே !

எம்மனிதர் என்றபோதும் “நமது” என்றீரே !

எந்நாளும் ஒன்றுபட்டு இணைந்து வாழ்வீரே !

 

அரபாவில் ஒன்றுகூடி மகிழ்ந்து கொண்டீரே !

அழுகையுடன் இறைவனையே புகழ்ந்து நின்றீரே !

உருகியதோர் மனதுடனே அருளைப் பெற்றீரே !

உலக வாழ்வில் பாவங்களைக் கழுவி வாழ்வீரே !

 

குர்பானி “அறுத்து தியாகம் செய்து வந்தீரே !

குற்றங்குறை யாவையுமே அழித்து வந்தீரே !

அற்பமான வாழ்வையங்கு புரிந்து கொண்டீரே !

அழியாத சொர்க்கவாழ்வில் புகுந்து விட்டீரே !

 

ஹஜ்பயணம் சுற்றுப்பயணம் போல இல்லையே !

கடமைகளும் கண்ணியமும் நிறைந்த வல்லவரே !

நிச்சயமாய் நினைவனைத்தும் மாற்றும் பயணமே !

நினைக்க நினைக்க வாழ்வு முழுதும் இனிக்கும் பயணமே !

 

 

 

News

Read Previous

அறிஞர் க.பூரணச்சந்திரன் இணையதளம் அறிமுகம்

Read Next

காணவேணும் இந்தியாவை

Leave a Reply

Your email address will not be published.