வாழும் வான்மறை

Vinkmag ad

வாழும் வான்மறை
————————————-
வானகமும் பொய்த்து போகலாம்
வயல்வெளியும் வறண்டு போகலாம்
கானகமும் தொலைந்து போகலாம்
வான்மறை என்றும் வாழும்

உணர்வுகளும் மரத்துப் போகலாம்
உறவுகளும் மறந்து போகலாம்
உயிர்களும் மாய்ந்து போகலாம்
உலகமறை என்றும் வாழும்

அலைகடலும் வற்றிப் போகலாம்
ஆழிகாற்றும் அமைதி ஆகலாம்
கனிகள் சுவை இழந்து போகலாம்
கவின்மறை என்றும் வாழும்

மலைகளும் பெயர்ந்து போகலாம்
இலைகளும் உதிர்ந்து போகலாம்
மலர்களும் காய்ந்து போகலாம்
மாமறை என்றும் வாழும்

அல்லாஹ் என்று சொல்ல ஒருவன்
அவனியில் இருக்கும் வரை
அல்லாஹ்வின் முடிவு தாமதிக்கலாம்
அதுவும் இல்லை என்று போனால்

சுழலும் உலகம் நின்று போகலாம்
சூரிய சந்திரன் சுருட்டப் படலாம்
பிறகோள்களும் சிதைந்து போகலாம்
பிரபஞ்சங்கள் வெடித்து சிதறலாம்

மாற்றம் என்று வந்து விட்டால்
மறுமை ஒன்று நிகழ்ந்து விட்டால்
மாமறையும் மறைபொருளாகி
மறுபடியும் வானம் ஏகலாம்

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

தேனீக்களைக் குறிவைக்கும் துப்பாக்கிகள்

Read Next

அரபிச் செம்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *