ரோஜாராணி

Vinkmag ad

ரோஜாராணி

 

                    பொன் குலேந்திரன் (கனடா)

            ரோஜாவின் மணம் அவள் கூந்தலுக்கு உண்டு

           ரோஜா இதழ்களின் சுவை அவளின் உதட்டில் உண்டு..

           ரோஜாவின் நிறம் அவளின் சருமத்தில் உண்டு

          ரோஜா மலரை பார்த்தும் கவரும் போன்ற  பார்வை அவளுக்குண்டு.

           ரோஜா மலர்  மோட்டில் இருந்து விரிவது  போன்றது அவள் சிரிப்பு.

ரோஜா செடியின் தண்டு போன்றது  அவள் உடல்.

           காற்றில்  அசையும் ரோஜா செடி போன்றது அவளின் நடை.

          ரோஜா செடியின் முற்கள் போன்று அவளைப் பெற்றோர் பாதுகாத்தனர்.

          வறுமை நிமித்தம் சினிமாவில் நடிக்கச் சென்றாள் அவள் .

          ரோஜாவை   தேனீக்கள் நாடுவது போல்  அவளை ஆடவர்கள் நாடி வந்தனர்,

அவள் சிக்கினாள் ஒரு பாதகன் வலையில்,

          அவன், அவள் இதழ்களை சுவைத்தான்.

         அவன், அவளை இறுக அணைத்தான்.

அவன் தன் ஆசை தீர அவளை  அனுபவித்தான்..

அவனுக்கு தெரியும் தன்னை மரணம் நெருங்குகிறது  என்று.

அவன் அதை அவளுக்குச் சொல்லவில்லை.

அவள் கேட்ட பணம் அவன் கொடுத்தான்.

அவளின்  குடும்பத்தின்  வறுமை போயிற்று.

அவளின் தங்கைக்கு திருமணம்ஆயிற்று.

அவளின் தம்பி படித்து பட்டம் பெற்றான்

பாவம் அவளுக்குத் தெரியாது அவன் தன் மரணத்தின் வியாதியை

அவளுக்கு பரிசாக கொடுத்ச் சென்று விட்டான் அந்த பாதகன் என்று.

சில மாதங்களில் ரோஜா மலர்  வாடி அழுகியது.

பெற்றோர் மகளை அடையாளம் காணவில்லை

தங்கையும், தம்பியும் அவள் பெயர் சொல்ல விடும்பவில்லை .

தெரு ஓரத்தில் கிடந்த அந்த மலரை,

தொட பலர் அஞ்சியபோது,

நல்ல மனம் உள்ள நல்லவர்கள் நால்வர்

அழுகிய ரோஜா மலரை அடக்கம் செய்தனர்

****

(ஒரு சினமா நடிகைக்கு நடந்ததை வைத்து புனைந்தது)

News

Read Previous

துபாயில் தமிழக பிரமுகருக்கு விருது

Read Next

1999 ல் நாலாயிரம் ரூபாய் முதலீடு 2019 ல் எழுநூறு பேருக்கு முதலாளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *