மோடி மந்திரம்

Vinkmag ad

மோடி மந்திரம்

ஐநூறு ,ஆயிரம் செல்லாதென்று
அதிரடியாய் அறிவித்தார் மோடி
அது மோடி  மந்திரம்
கள்ளப்  பணத்தை வெளிக்கொணர
ஒரு மூடு மந்திரம் .
வரவேற்கப்பட வேண்டிய
ராஜா தந்திரம்.
மூச்சுத்திணறியது
வங்கி இயந்திரம்.
பரவலாய் முடங்கியது
பணம்  வழங்கும் இயந்திரம்   .
கள்ளப்  பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால்
உள்ள  பணத்தையும் எடுக்க முடியாமல்
உபத்திரவத்தில் மக்கள் , ஒன்றரை மாதமாக
ஊணுறக்கம் மறந்து வரிசையிலே நிற்கின்றார் .
நடுத்தர மக்களெல்லாம்
நடுத்தெருவில் நிற்கின்றார் .
காய்கறிக்குப் பணமில்லை
காய்ச்சலுக்குப் பணமில்லை
கல்யாணத்திற்குப் பணமில்லை
கருமாதிக்கும் பணமில்லை
அன்றாடம் பணத்திற்கு
அல்லாடும் மக்களுக்கு
என்றோ வரும் நன்மை
எப்படிப்புரியுமப்பா .
வங்கி இயந்திரங்களுக்கு
வரவேண்டிய பணத்தை – கையூட்டு
வாங்கி சில புல்லுருவிகள்
வாரி ,வாரி அனுப்பிவிட்டார்
ராவோடு ராவாக
ராவுக்கும் , ரெட்டிக்கும்.
ஆயினும்
துவங்கிய நடவடிக்கை
துவளாமல் போகவேண்டும்
பதுங்கிய பணமெல்லாம்
பறிமுதல் செய்யவேண்டும் .
அரசியல் நடவடிக்கையாக இல்லாமல்
அரசின் நடவடிக்கையாக வேண்டும்.
ஐம்பது நாள் மட்டுமல்ல
நூறு நாள் காத்திருப்போம்
கல்லாவில் வைக்கவேண்டியதை
கழிப்பறையில்  வைத்தவரும்
பூஜையறையில் வைக்கவேண்டியதை
பள்ளியறையில் பதுக்கியவரும்
கடுஞ்சிறையில் இருக்கவேண்டும்
காலமெல்லாம் அழவேண்டும் .
வஞ்சகர் குடும்பமெல்லாம்
நெஞ்சம் பதறவேண்டும்.
நீதிக்குப் புறம்பானோர்
வீதிக்கு வரவேண்டும்.
உள்நாட்டு முதலைகளை
உருக்குலையைச் செய்த்துவிட்டு
வெளிநாட்டுப் பதுக்கலையும்
வெளிக்கொணர வேண்டுமய்யா .
இவையெல்லாம் நடக்குமென்றால் ,
இன்முகத்தோடு நாங்கள்
இன்னும் சிலகாலம் ,
இன்னல்களைத் தங்கிடுவோம்
தோள் கொடுக்க நாங்களுண்டு
தொடரட்டும் இந்தப்பணி
கால்கடுக்க நிற்கும் எங்கள்
காலைவாரிவிடவேண்டாம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

புத்தாண்டு வாழ்த்துகள்

Read Next

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *