புத்தாண்டு வாழ்த்துகள்

Vinkmag ad

புத்தாண்டு வாழ்த்துகள்

வாழ்த்துகள் இனிய வாழ்த்துகள்
புத்தாண்டில் நலம் சூழ வாழ்த்துகள்
கொள்ளையர் மனம் திருந்தட்டும்
வெள்ளை மனம் நிம்மதி பெறட்டும்
உணவின்றி உயிர் வாழ்வதேது?
உலகம் இதை உணரட்டும்!
உழவுத் தொழில் செழிக்க
உற்ற வழிதனைக் காணட்டும்!
அறிவியல் வளர்ச்சி யுறட்டும்!
ஆணிவேர் இயற்கையே, நினைவிருக்கட்டும்!
இயற்கையின் கை தழுவட்டும்
இடர், பேரிடர் நிகழாதிருக்கட்டும்!
கட்டுப்பாடும் பணத் தட்டுப்பாடும்
கடந்த காலம் ஆகட்டும்!
கால்கடுக்க வங்கிகள் முன்
காத்திருப்பது ஓயட்டும்!
திணிப்புகள் போதும் போதும்,
தீர்வுகள் வேண்டும் வேண்டும்!
நீதியின் குரல் ஓங்கட்டும்
நிம்மதியாய் மக்கள் வாழட்டும்!
புத்தாண்டு இனிய புத்தாண்டு
வார்த்தையில் முகிழ்வது, வாழ்விலும் மலரட்டும்!
– நர்கிஸ் பானு
அஜ்மான்.

News

Read Previous

மருத்துவ மாமேதை அலி இப்னு ஸீனா

Read Next

மோடி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *