மொட்டான காதல் மலருமா ?

Vinkmag ad

IMG_43896489793318மொட்டான காதல்  மலருமா
=========================
பெண்
பகட்டு வாழ்க்கை இல்லை
எடுப்பான உடை இல்லை
படுத்துறங்கப் பாய் இல்லை
கட்டாந்தரையில் உறங்கி
உப்புக் கஞ்சி குடித்து வரும்
ஏழை வீட்டுப் பெண் நான்
ஓரப் பார்வையை நீ ஒவ்வொரு
தடவையும் வீசும் போதும் உள்ளே
தவிக்கின்றேன் நானடா…♥

                         ஆண்
நீ கட்டிய சேலை போதுமடி
கட்டில் போடத் தேவையில்லையடி
கடித்து துப்ப எலும்புக் கறியும்
தேவையில்லையடி   நீ குடிக்கும்
கஞ்சியில் சின்ன விரல் தொட்டு
கொஞ்சம் விட்டுக் கொடு அதுவே
போதுமானதடி….♥

                   பெண்
அடடா மன்னன் வீட்டு மைனர் போல்
எடுப்பான கண்ணா  என்  விழி பேசி
நான் மொழி திறக்காமல்  நின்ற போது
நீ  தவித்ததையும் நான் அறிவேனடா…♥

                          ஆண்
உன் விழி பேசி இதழ் பேசாத போது
உன் விரல் துடித்ததையும் நீயும்
தவித்ததையும் செய்வது புரியாமல்
விழித்ததயைும் நானும் அறிவேனடி..♥

                   பெண்
அய்யய்யோ  வெட்கம் வருகின்றதே
நீ பக்கம் வந்து   நின்றதுமே
சொர்க்கம் தெரிகின்றதே கண்ணில்
தொட்டு விடாதே அச்சம் விழித்து விடும்
அதிகம் கெஞ்சாதே நாணமும்
விழித்துக் கொள்ளும்…♥

                ஆண்
ஆஹ  நான் அறியாத புரியாத
பருவம் இல்லையடி அறிந்தே
அருகில் வந்தேனடி. புதுமையான
மொழி பேசி மகிழ்ந்தே செல்வதற்கு
இளம் நெஞ்சம் கெஞ்சுமடி கொஞ்சம்
நீ அச்சத்தை மிஞ்சுவாயாடி..♥

               பெண்
கருத்தம்மா பாட்டி  எடுத்த சுள்ளியை
கட்டி விட்டு அடி பிடித்து தேடி வருவார்
இப்போ அவர் நோட்டமிடும் முன்னே
நீ நடையைக் கட்டு ராசா காட்டுப்
பாதை கற்றுக் கொடுத்தது உனக்கும்
எனக்கும் காதல் பாடமடா…♥

               ஆண்
ஆமாம்  ஆமாம்  பொட்டிக் கடை
பொன்னுசாமி தாத்தா வட்டிக்கு வாங்கி
வைத்த கடை அடேபேராண்டி பாரடா
இதை என்று விட்டுப் போார்  என்னை
நானோ வந்து விட்டேன் தேடி உன்னை
திட்டு வாங்கும் முன்னே போக வேண்டும்
பெண்ணே….♥

                    பெண்
அடப்பாவி அஞ்சு பத்து காசி உழைக்கும்
காளைக்குத்தான் இந்த வஞ்சியடா
கஞ்சி கொடுக்க வழி இல்லாத ஒருவனுக்கு
பொண்ணு கொடுப்பது இல்லையெடா
இது எங்கள் கிராமத்து எல்லையடா
போடா மாப்பிள்ளை உழைப்புடன் வாடா
என் வீட்டை நாடி…♥

                      ஆண்
ம்ம்ம்   அது  வேறயாடி பெண்ணே தமிழில்
பிடிக்காத வார்தை எனக்கு உழைப்பு
உனக்காக நான்  எடுக்கேன் முயற்சி
அதுக்காகத்தான்  தாத்தா கொடுக்கார்
பயிற்சி.. போச்சி எல்லாம் போச்சி
வஞ்சிக்காக நான் கஞ்சிக்கு
கடை பார்க்க வேண்டிய நிலை ஆச்சு
வாறேனடி பெண்ணே நான் போய்
வாறேனடி……!♥

ஆர்  எஸ் கலா

இலங்கை

News

Read Previous

வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி வகுப்பு

Read Next

கண்ணீர் அழுக்கு கழுவப்படாது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *