முண்டாசுக் கவிஞர் பாரதி

Vinkmag ad

முண்டாசுக் கவிஞர் பாரதி
அன்னிய நாட்டுப் பொருள்களை வெறுத்த அறிஞரே !

மூடநம்பிக்கைகளை முடக்க முயன்று முழங்கிய சங்கே !

முறுக்கு மீசை முறுக்கி முண்டாசு கட்டியவரே !

காக்கை குருவி களிடம் இரக்கம் காட்ட சொன்னவரே !

சாதி சாக்கடையை சுத்தம் செய்ய விரும்பியவரே !

மதத்தின் மதத்தை அடக்க அயராது பாடுபட்டவரே !

பாட்டிலே விடுதலை உணர்வை ஊட்டிய வீரரே !

கவிகள் விரும்பும் வண்ணம் பா புனைந்த கவிஞரே !

காலத்தை கவியால் வென்று காவியமாக திகழ்ந்தவரே !

பட்டினி கிடந்த போதிலும் பாடல் பல பாடிய பாவலரே !

விடுதலை உணர்வை ஊட்டிய வீரத்தமிழரே !

பெண் கல்வி வேண்டிய போராளியே !
பார் போற்றும் பாரதியே !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

அலீ (ரலி) வரலாறு

Read Next

உங்கள் குரலை பதிவு செய்தல் திருத்துதல்

Leave a Reply

Your email address will not be published.