மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்!

Vinkmag ad

மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்!

நல்லாட்சி மலரட்டும் நன்மைகள் நடக்கட்டும்
நாநயம் சிறக்கட்டும்  நற்பணி தொடரட்டும்
சொல்லியது கிடைக்கட்டும்  சொல்லாமல் செய்யட்டும்
சுமையது குறையட்டும்  சுணங்காமல் மலரட்டும்
புல்பூண்டு முளைக்கட்டும்  புவியெலாம் செழிக்கட்டும்
புனிதங்கள் பொழியட்டும் புறம்பேச்சு ஒழியட்டும்
இல்லாமை மாறட்டும்  இலவசங்கள் மறையட்டும்
இலக்கியம் வளரட்டும்  இன்தமிழ் புலரட்டும்

சத்தியம் நிலைக்கட்டம்  சமத்துவம் நிலவட்டம்
சாதனை தொடரட்டும்  சரித்திரம் பேசட்டும்
முத்திரை பதிக்கட்டும்  மும்மாரி பொழியட்டும்
முடங்காமல் மிளிரட்டும் முழுமையாய் ஒளிரட்டும்
வித்தகம் படைக்கட்டும்  விலைவாசி குறைக்கட்டும்
வறுமைகள் ஒழிக்கட்டும் வளமெலாம் நிறையட்டும்
சுத்தமே தழைக்கட்டும் சுகவாழ்வு தவழட்டும்
சுயநலம் ஒழிக்கட்டும்  சொன்னதை செய்யட்டும்

மதுவினை ஒழிக்கட்டும்  மயக்கமே தெளியட்டும்
மனைவளம் பெருகட்டும்  மனமெலாம் வாழ்த்தட்டும்
முதுமையும் சிரிக்கட்டும் முன்னேற்றம் காணட்டும்
முகிலென பொழியட்டும்  முல்லையென மணக்கட்டும்
பொதுமையே பூக்கட்டும்  புகழுரை சேர்க்கட்டும்
புதுவாழ்வு தெரியட்டும்  பொய்மைகள் மறையட்டும்
குதுகலம் கொழிக்கட்டும்  கொடுமைகள் ஒழியட்டும்
குடிமக்கள் வாழ்த்தட்டும்  கொற்றவர் வாழட்டும்

-ப.கண்ணன்சேகர், திமிரி. பேச : 9894976159.

‘Kavisooriyan’ Haikoo idhazh,
13,Varada reddi street,
Thimiri-632512.
Vellore dist., Tamil nadu, INDIA.
cell:9698890108.

News

Read Previous

இன்ஷா அல்லாஹ்

Read Next

சதகாவின் பலன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *