மறக்க முடியவில்லை

Vinkmag ad
மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை – ஆம்

மறக்கத்தான் முடியவில்லை .

அந்த நாள்  ,
நான் கடல் கடந்து துபாய்

வந்த நாள்
புதியதோர் நண்பரைக்

கண்ட நாள்

தற்செயலாய் சந்தித்தோம் – அது

நற்செயலாய் ஆனதுவே.

காவிரி மைந்தரின்

முதல் சந்திப்பிலேயே

சிவாஜிகணேசனும்

கண்ணதாசனும்

எந்த அளவு எங்கள் மனதில்

வந்தமர்ந்திருக்கின்றனரென்று

சிந்தனை முழுதும்

பகிர்ந்த நாள் .

தமிழ்த்தேரின் அறிமுகம்

பெற்ற நாள்

‘கல்வி ‘ என்னும் தலைப்பிலும்

‘புகழ் ‘ என்னும் தலைப்பிலும்

கவிதைகள் நான் எழுதித்

தந்த நாள் .

அமீரகத்தில் நடந்த
தமிழ்தேர் பவனி யில்
என் கவிதைகளும் அச்சேறிய
புத்தக வெளியீட்டு விழாவில்
அமீரகத்தில் மேடையில்

அமர்ந்த நாள்   .

என் கவிதைகள்

அரங்கேறிய

சிறந்த நாள் .

என் கவிதைகளின்

மகத்துவம் உலகறியச் செய்த

மகத்தான நாள் .

கடல் கடந்து நான்

புகழ் அடைந்த

புகைப் படங்கள் கண்டு

உற்றாரும் ,உறவினரும்

உற்சாகம் அடைந்து

உளமாரப் பாராட்டிய

உயர்ந்த நாள்.

அத்தோடு முடியவில்லை

அடுத்தடுத்த இதழ்களிலும்

அனுப்பிய   என் கவிதைகள்

அத்தனையும் வெளியிட்டு – சிலேடை

சித்தனென்ற என் பெயரை

முத்திரையாய்ப் பதித்து வரும்

கவிச் செம்மல்
காவிரி மைந்தரையும்

கலைச் செம்மல்

முதுவையாரையும்

இனிய நண்பர் இப்ராகிம் ஜியாவையும்
மறப்பது நன்றியில்லை

மறக்க நினைக்கவில்லை .

மறக்கத்தான் முடியவில்லை. .

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
2.04.2015

News

Read Previous

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!

Read Next

இது டாக்டர் ஃபேமிலி

Leave a Reply

Your email address will not be published.