மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்

Vinkmag ad

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்
___________________________________________ருத்ரா

கடவுளின் குழந்தையை
கடவுளே கொல்வது தான்
நரகாசுரன் வதம்.
நம்மால் வதம் செய்ய வேண்டிய‌
குழந்தையை நாம் ஏன் பெற வேண்டும்?
இங்கு ஒரு சூழ்ச்சியை செய்கிறார்
கடவுள்.
தன்னை வழிபடுபவர்களுக்கு
குடும்பம் குழந்தை குட்டிகள்
இருக்கக்கூடாது.
அப்படி இருந்தால் அவர்கள் மண்டையில்
பிரம்மம் இருக்காது.
உப்பு புளி மிளகாய்க்கவலை தான் இருக்கும்.
எனவே நாமே நம் குழந்தையை
வதம் செய்வதாய் புராணம் எழுதினால் தான்
இந்த பக்தர்களும்
குடும்பம் பிள்ளை பற்று எல்லாவற்றையும்
அறுத்துக்கொண்டு நம் பின்னே
வருவார்கள்.
இதற்குத் தான் வரிந்து வரிந்து
பாஷ்யங்கள் எழுதினார்கள்.
இந்தியா இந்த‌
புராணங்களில் படுத்துப்புரண்டு
கொண்டிருப்பதால் தான்
ஒரு சாதாரண விஞ்ஞானக்கண்டு பிடிப்பான‌
“மின்சார பல்பு” கூட
நமக்கு இன்னும் கண்ணாடி லிங்கமாக மட்டுமே
தெரிகிறது.
இந்தியக்குடிமக்களே
புராணங்களை
அம்புலிமாமாக்கதைகளைப்போல‌
படித்து விட்டு
குப்பையில் எறியுங்கள்.
அப்போது தான் நீங்கள்
உலகத்தில் ஒரு உயரத்தை உணர்வீர்கள்.
இல்லாவிட்டால்
வராக அவதாரம் எடுத்து
மண்ணைக்கிளறிக்கொண்டிருப்பீர்கள்.
அப்படியே அடுத்தவன் விஞ்ஞானத்தில்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கே “செவ்வாய் தோஷம்” அகற்ற‌
யாகம் வளர்க்க இடம் தேடுவீர்கள்.
தீபாவளி எனும் பொம்மைப்பண்டிகைக்குப்பதில்
“நாம் சுதந்திரம் பெற்றதையும்
இன்னொறு சுததிரம் பெற வேண்டியதற்குமான‌
நம் கனவையும்
ஒரு “உண்மைப்பண்டிகையாக”
கொண்டாடலாமே!
நரன் என்று நம்மையே அசுரனாக்கி
வதம் செய்து விளையாடும்
இந்த “சின்னப்பயல்கள்” விளையாட்டை
எப்போது நிறுத்துகிறோமோ
அதுவே உண்மையான தீபாவளி.
இந்த இடைவெளிக்கு இடையே உள்ள தூரத்தை
உங்கள் “பத்தாயிரம்”வாலாக்கள் கொண்டு
வெடித்துச் சிதறடியுங்கள்.
அதற்கு என் மனமார்ந்த
தீபாவளி வாழ்த்துக்கள்!

News

Read Previous

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Read Next

புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்

Leave a Reply

Your email address will not be published.