புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்

Vinkmag ad

புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்:
*********************************************************************
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் புதுக்கோட்டையை ஆட்சி செய்த
தொண்டைமான் மன்னர்களால் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று
நூலில் , அக்காலத்தில் கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய குறிப்புகள்
காணப்படுகின்றன. இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த பல
அரிய தகவல்களை தருகின்றன. பழமையான அந்த நூலில் உள்ள தகவல்களை காண்போம்
🔥 ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் சமஸ்தான தமிழ் புத்தாண்டை
விமர்சையாக கொண்டினர்.
🔥 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நவராத்தி  மிகவும் விமர்சையாக
கொண்டாடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் கொலு
பொம்மைகளை வைத்து கும்மி பாடி மகழ்வர்.
🔥 நவராத்திரி விழாவினை முன்னிட்டுநாட்டின் அனைத்து கோயில்களிலும்
சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். புதுக்கோட்டை மன்னர் வழிபாடுகளில்
பங்கேற்று  நாட்டு மக்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்.
🔥 தமிழ் மற்றும் சமஸ்கிருத அறிஞர்கள் தலைநகரில் கூடி தங்களது திறமையை
காட்டி மன்னரிடம் பரிசுகளை பெறுவர்.
🔥 நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் மக்கள் ஆயுத பூஜையை விமர்சையாக
கொண்டாடி மகிழ்ந்தனர்.
🔥 நவராத்திரி முடிந்து பத்தாவது நாள் புதுக்கோட்டை மன்னர் யானையின் மீது
அமர்ந்து நகர் வலம் வருவார். மக்கள் அனைவரும் மன்னரைக் காண ஆர்வத்துடன்
கூடியிருப்பார்கள். இதற்கு ” விஜய யாத்திரை” என்று பெயர்.
🔥 நகர்வலம் முடிந்து மன்னர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அம்பாளை
தரிசிக்க செல்வார்.  அப்போது சூரர்களை அம்பாள் வென்றதை குறிக்கும்
வகையில் மன்னர் முன்னிலையில் சில அம்புகள் விடப்படும்.
🔥 அக்டோபர்- நவம்பர் மாதங்களில் தீபாவளி திருநாள் விமர்சையாக
கொண்டாடுவர். மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் வைத்து
குளித்து பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். தீபாவளியன்று அதிகாலையிலேயே
எண்ணெய் வைத்து குளிப்பது கங்கையில் நீராடுவதற்கு சமமான ஒன்றாக
கருதப்பட்டது. நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததன் நினைவாக தீபாவளி
கொண்டாடப்படுகிறது.
🔥ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது. அறுவடைக்கு
தயாராக உள்ள அரசியை பாலில் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து
மக்கள் வழிபாடுவார்கள்.
🔥பொங்கலுக்கு அடுத்த நாள் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு அவற்றிற்கு சுவை
மிகுந்த பால் சோறு அளிக்கப்படும். மூன்றாவது நாள் கிராமங்களில்
ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
🔥 மார்ச்- ஏப்ரல் காலங்களில் ராமர் பிறந்த நாளான ராமநவமியும், ஆகஸ்டில்
கிருஷ்ணர் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படும்.
🔥பிப்ரவரி- மார்ச் காலங்களில் சிவராத்திரியும், ஆகஸ்ட்- செப்டம்பர்
காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படும்.
🔥 தை அம்மாவாசை, ஆடி அம்மாவாசை மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் காலத்தில்
வரும் மகாலய அம்மாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களுக்கான வழிபாடுகள்
நடந்து வருகிறது.
🔥 ஆவணி அவிட்டம் நாளில் பிராமணர்களில் புதியதாக வேதம் படிக்க
தொடங்குபவர்கள் பூனூலை இட்டுr படிக்க தொடங்குவது வழக்கம்.
🔥ஆடிப்பெருக்கு விழா காவிரி நிறைந்து ஒடும் ஆடி பதினெட்டாம் நாள்
கொண்டாடப்படுகிறது.
🔥மார்ச் மாதத்தில் காமன் பண்டிகளை நாட்டுப்புற மக்களால்
கொண்டாடப்பட்டது. சிவன் காமனை வீழ்த்தியதன் நினைவாக இந்த நாள்
கொண்டாடப்படுகிறது.
🔥 மாசி – ஐப்பசி காலங்களில் அதிகாலையில் எழுந்து நீரோட்டையில் குளிப்பது
உகந்ததாக கருதப்பட்டது.
🔥வைகாசி மாதம் தான தர்மங்களுக்கு சிறந்த மாதமாக மக்கள் நம்பினர்.
🔥 மார்கழி மாதத்தில் அதிகாலை வழிபாடு மிகவும் உகந்ததாக நம்பப்படுகிறது.
(தகவல்: Manual of pudukkottai state vol 1 , pg 95 )
படங்கள்: மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் அவர்களின் ராஜபவனி…..
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்

News

Read Previous

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்

Read Next

‘க்ரியா’ அகராதி

Leave a Reply

Your email address will not be published.