மத நல்லிணக்கம்

Vinkmag ad

 

மத நல்லிணக்கம்

 

  • கவிஞர் பொன்னகரம் சுல்தான்

 

ஐந்தாண்டுத் கொருமுறை தேர்தலும்

நைந்துபோன வாழ்க்கைய தேற்றல

மந்திரிகள் மாறிமாறி அமர்கிறார்

மக்களுக்கு எந்த மாற்றமும் நிகழல

 

உயர்ந்தவர் உயர்கிறார், ஏழ்மையில்

உழல்பவர் மாறிடவே இல்லையே

கனிவளங்கள் பெருகுவதாய் விளம்பரம்

கண்ணீரினை குறைத்ததாய் யார் சொன்னார்

 

அமைதியான நாட்டினிலே மதவெறி

அமைந்திடுது தேர்தலாலே ஆட்சியில்

ஐம்பதாண்டு பின்னேஏன் மதக்கருத்து

ஜம்பமாக பேசப்படுது வெளியிலே

 

ஊடகங்கள் சம்பாதிக்கும் முறையிலே

உண்மைகளை மறைக்கிறது சரியில்லே

தேடற்கரிய ஒற்றுமையை பிளப்பதாலே

தேனினிக்கும் ஒருமைப்பாடு கிடைத்திடாது

 

கூடிநின்று குரல் கொடுத்த சாதனையால்

தேடிவந்த பகைவர்கள் ஒடிப்போனார்

வாடிநிற்கும் பயிரினுக்கு நீர்வார்த்ததால்

வளர்ந்து நிற்குமுயர மாக என்றுமே

 

அடிதடிக்கு இயக்கமென ஆர்ப்பரித்தால்

நொடிப்பொழுதும் உறவும்பகை யாகிடுமே

அடித்துக்கொண்டு வாழவாநாம் பிறப்பெடுத்தோம்

உள்ளும் புறமும் வேஷம் காட்டுகின்றார்

 

மனிதரிலே இளம்வயது பெருமைதானே

மனதினிலே வன்முறைக்கேன் இடந்தந்தார்

கேடுநினைத்து கேடில்வீழ துடிப்பதேன்டூ

நாடுவாழ நாமும்வாழ திட்டமிடுக

 

எம்மதமும் இனிவளரப் போவதில்லை

எம்மதத்தையும் ஒழிப்பதற்கு ஆளில்லை

மதமென்ற பெயராலே காழ்ப்புணர்வு

மதமெடுத்து ஆடிடுவோர் மனிதரில்லை.

 

நன்றி : முஸ்லிம் முரசு – நவம்பர் 2016

News

Read Previous

சிரிக்க பழகுவோம் !

Read Next

சமூக விலகலைப் பின்பற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *