சமூக விலகலைப் பின்பற்றுவோம்.

Vinkmag ad

சமூக விலகலைப் பின்பற்றுவோம்.    

       உலகை ஒரு சேர முணுமுணுக்க வைத்த சொல் கோரோனா. கோரனான விற்கு எதிரான நடவடிக்கையாக, அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு  செவி மடுக்காமல் சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு. நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கி வீட்டுக்கு செல்கிறோம். தொற்று நோய் காலங்களில் சமூக விலகலைக் கையில் எடுப்பதேச் சாணக்யத்தனம். 

 
சமூக நலன்..

       “தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத  வாழ்க்கை  முறைகளை அமைப்பது  சமூக பொறுப்புணர்வாகும்.இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்றாகும்!
சமூக பொறுப்புணர்வு என்பது சின்‌ன,சின்ன செயல்கள்,  சொல்லிருந்து உயிர்ப் பெருகிறது.

தும்மல்,இரும்பல் இவைகள் மூலமும் நோய் கிருமிகள் வெளியாகின்றது.  தும்மல் என்பது இயற்கையானதென்பதற்காக கூட்டத்தில் நிற்கும் போது,கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக்  கொண்டு முகத்தை மூடாமல் அப்படியே தும்புதல் என்பது நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்கு நாமே இலவசமாக நோய்களைத் தாரை வார்ப்புச் செய்கின்றோம்‌ என்ற பொருள்.தும்பும் போது சற்று தூரம் சென்று தும்புதல் சமூக நலன் கலந்த ஒழுக்க முறைகளாகும்.


ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. எனக் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வாளர்கள், நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து சில திரவங்கள் வெளியாகி நம்மருகில் உள்ளவருக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை  நோய்த் தடுப்புச்  சார்ந்தவையாக கருதி,இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள்.”

நபி (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் – திர்மிதி – ஹாக்கிம்)

தும்மல் மூலம் சில நோய்கிருமிகள் காற்றில்  பரவினாலும் எச்சிலாலும் நோய்கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புதலைத் குற்றமாகக் கருதப்படுகிறது.. 

நபி (ஸல்) பொது இடங்களில் எச்சில் துப்புவதைக் கண்டிக்கின்றார்கள்.அதே நேரம், வேறு இடங்களில் எச்சில் துப்பினால் அதை மண் கொண்டு மூடுவதை நன்மை பயக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.  

ஒரு தினத்தின் அழகிய செயலைச்செய்பவர் யார் எனில்; தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதக் கண்டேன்” (முஸ்லிம்)

நோய்த் தொற்று காலங்களில் மட்டுமல்லாமல், மற்ற காலங்களிலும் இந்த ஒழுக்கங்களை சமூக நலன் கருதி பின்பற்றுவது அவசியமாகும்”.

ஆறுதல்..

    சில  காரணங்களால் சிலரை கோரோனா தொற்றிக் கொள்கிறது. நோய்வாய்ப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகும்‌ மனிதர்களுக்கு,  ஆறுதல் வார்த்தைகள் கூறுதல் அவசியமாகும். தனிமையாக இருக்க வைக்க வேண்டுமே தவிர, சமூகத்தை விட்டு தனிமைப் படுத்தக் கூடாது.” தீண்டதாகாவர்களாக பார்ப்பது நோயாளிக்கு மன அழுத்தம் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம்.  இந்த நோயோடு மற்ற நோய்களும் தொற்றிக்கொள்ளும் அபாயமும் இருக்கின்றது. தற்கொலை முயற்சிக்கு வாய்ப்புகளை நாமே ஏற்படுத்திக் கொடுப்பது போன்றாகும்.


 ஒருவர் நோய் வாய்பட்டால்  ஆறுதல் கொடுக்கும் வண்ணம் நம்‌ செயல், சொல்  இருக்க வேண்டும்! நம்மை அந்த நோய் தொற்றிக் கொள்ளாதவாறு பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து மொபைல் போன் மூலம் மன ஆறுதலும்,உற்சாகமும்  அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.நோயாளிகளை முற்றிலும் ஒதுக்கி வைப்பதை இஸ்லாம் பாவமாகக் கூறுகிறது.அவர்களிடம் நலம்‌ விசாரிப்பது கடமை என்பதைக் கவனத்தில் எடுக்க வலியுறுத்துகிறது.

 “விரைவில் சரியாகும் என்ற சொல், மன அழுத்தைதைலிருந்து அவர்களை பாதுகாக்கும். மன உற்சாகத்தை பற்றிக் கொள்ளச் செய்யும்.    நோயாளிகளை ஒதுக்கி வைத்துப் பார்க்காமல்.ஆறுதல் வார்த்தைகள் கொண்டு அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்வது அறிவு சார்ந்த சமூகத்தின் அடையாளமாக இஸ்லாம் பேசுகிறது”.

நபி(ஸல்) கூறினார்கள்: நோயாளிகளை உடல் நலம் வினவுங்கள்! பசியாளிக்கு உணவளியுங்கள்! கைதியை (உரிய ஈட்டுத்தொகை வழங்கி) விடுதலை செய்யுங்கள்.அறிவிப்பாளர் : அபூமூஸா(ரலி)ஆதாரம் : புகாரி

ஒரு காட்டரபி நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நபி(ஸல்) அவர்கள், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் சென்றால், லாபஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் (பரவாயில்லை)அல்லாஹ் நாடினால், குணமாகும்எனக் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)ஆதாரம் : புகாரி

ஊரடங்கு உத்தரவு..


        “நோய்த் தொற்று பரவாமல் பரவாமல் தற்காத்துக்கொள்ள, உலகமே ஊரடங்கில் உறங்கி கிடக்கின்றது.நோய்த் தொற்று  காலத்தில் ஊரடங்கு உத்தரவை நபி மொழி நமக்குக் கடமையாக கூறுகிறது. நோய்த் தொற்று காலங்களில் தத்தமது வாழும் இடம்,வீடு இவைகளைக் விட்டு வெளியேறுவதை இஸ்லாம் விரும்பவில்லை.

அரசு நமக்கு ஊரடங்கு உத்தரவு பெயரில் நம்மை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்று நமக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை கடைபிடிப்பது நம் மீது கட்டாயமாகும்.நமக்கு ஆபத்துக்கள் நெருங்கும் நேரத்தில் வீட்டில் இருப்பதே பாதுகாப்பு என்று எறும்பு மூலம் இறைவன் நமக்கு பாடம் பயிற்று விக்கின்றான்.

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. குர்ஆன்27:18. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்
நபி (ஸல்)  கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (புகாரி)

நாளுக்கு, நாள் கொரோனா தோற்று நோயின் தீவிரம் அதிகம் காணப்படுகிறன.அரசின் கட்டளைகளை பின் தள்ளி நாம் சமூக விலகலை பின்பற்றாமல் மனம் போன போக்கில் சென்றால்,நமக்கும் நம் குடும்பத்திற்கும்,நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்”.

நோய்த் தொற்றுக்கான அனைத்து கதவுகளை அடைத்து, அத்தோடு நம் வீட்டு கதவுகளையும் சேர்த்து அடைத்து சமூக விலகலை பின்பற்றுவோம்.

A.H.யாசிர் ஹசனி

0556258851

News

Read Previous

மத நல்லிணக்கம்

Read Next

மானுடம் காப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *