மண்பாண்டங்கள் !

Vinkmag ad

 

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229

 

இப்போதெல்லாம்

மண்பாண்டங்களைப்

பார்க்கவே … முடியவில்லை !

 

எப்போது

அடுப்பங்கரை

கிச்சன் ஆனதோ …

அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !

 

யாருக்கேனும்

கோபம் வந்தால்

உடைவது என்னவோ…

மண்பாண்டங்கள் தான் !

 

ஆனால்…

அந்த வலி …. யாருக்கு ..?

 

அதைச் செய்தானே

குயவன் அவனுக்குத்தான் !

எந்த ஊர் மண்ணெடுத்து

எப்படிச் செய்தானோ…?

 

பசியோடு செய்தானோ..? கலை

ருசியோடு செய்தானோ..?

அந்த மண்பாண்ட

சமையலில் மட்டும்

தனி ருசி !

 

இதுபற்றி …

விஞ்ஞானமும்

இன்னும் சொல்லவில்லை !

எத்தனை கொக்கோகோலாக்கள்

வந்தாலும்

மண்பானைக் குடிநீர்

சுவையை தந்திட முடியாது !

 

ஆரோக்கிய வாழ்வுக்கு

லைப்பாய் .. மட்டும் தானா… !

மண்பாண்ட சமையல் என்று

இந்தத் தலைமுறையினர் அறிவாரா…?

 

நம் பாட்டியிடம்

கதை கேட்கிறோம் !

இன்னும் ஏதேதோ.. கேட்கிறோம்

மண்பாண்ட சமையல் ருசி

ரகசியத்தைக் கேட்டிருக்கிறோமா..?

இப்போது .. இடைவேளை !

இதுபற்றிக் கொஞ்சம் யோசிப்போம் !

News

Read Previous

மணிவிளக்கே ! மணிச்சுடரே !

Read Next

தண்ணீர் கனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *