மணிவிளக்கே ! மணிச்சுடரே !

Vinkmag ad

 

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229

 

 

சிந்தனைச் செல்வர்

சிராஜுல் மில்லத்தின்

சிந்தையில் உதித்தாய் – பல

விந்தைகள் பதித்தாய் !

மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன்

மகத்துவங்கள் தொடரட்டும் நூறாண்டு !

 

இருப்பத்தி ஐந்தாண்டு

இயக்கப்பணி செய்தும்

இன்னும் இளமைதான் உனக்கு ! – மணிச்சுடர்

கணிக்கும் கணக்கே கணக்கு !

 

அரசியல் ஆன்மீகம்

அறிவியல் என்றெல்லாம்

பேசும் உன் பெருமை நமக்கு – மார்க்கம்

பேணாதவரைத் தாக்கும் உன் வாக்கு !

 

எல்லோரும் மேலேற

ஏணியாய் நிற்கின்றாய் !

நல்லோர்கள் வாழ்த்து உனக்கு ! – உன்

நடையே முன்னேற்றப் போக்கு !

 

முஸ்லிம் லீக் வாழ

மூச்சுவிடும் உன் பணிகள்

காலத்தால் உயர்ந்து நிற்கும் ! – மணிச்சுடர்

கைகளே .. ஓங்கி நிற்கும் !

 

சமுதாய நாளேடு

சரித்திரக்கையேடு

உனக்கெது இருக்கிறது ஈடு ! – இதை

உணருமே சமுதாயம் மதிப்போடு !

 

இனிவருங்காலம்

இளைஞர்கள் காலம்

இளைஞரின் படைப்பை

மணிச்சுடர் ஏற்று

வலம் வர வேண்டும் என்பதேயென் ஏக்கம் ! – சில

வரலாற்றுத் தொடர்கள் வந்தால் பேரூக்கம் !

 

News

Read Previous

இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !

Read Next

மண்பாண்டங்கள் !

Leave a Reply

Your email address will not be published.