பொய்

Vinkmag ad

பொய்யும் புரட்டும் பெருகுது
மெய்யும் நாட்டில் மறையுது !
செய்யும் தொழிலோ தேயுது
பெய்யும் மழையும் குறையுது !

வாய்மை வளைந்தே போனது
நேர்மை குனிந்தே செல்லுது
உண்மை என்றுமே உறங்குது
அறியாமை எதிலும் நிலவுது !

பகைமை நட்பை முந்துது
பொறாமை தீயே பரவுது
பொறுமை நிதானம் இழக்குது
பொய்மை உலகை ஆளுது !

சுயநலமே முன்னிலை வகிக்குது
சுரண்டிடும் எண்ணமே வளருது
சுமைகளே நமைசுற்றி நிற்குது
சூதும்வாதுமே ஓதும் வேதமாகுது !

காண்பதும் நிகழ்வதும் இவையன்றோ
தோற்பதும் துவள்வதும் நாமன்றோ !
மாறுவதும் தேறுவதும் என்றுதானோ
மகிழ்வதும் வெல்வதும் என்றுதானோ !

காட்சிகளும் மாறிடுமோ..?

❄️🌷❄️🌷❄️🌷❄️🌷

குறுஞ் சிந்தனை
ஜே.அன்புரோஸ்.

News

Read Previous

தன்னம்பிக்கை

Read Next

பறவையின் (ம)ரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *