பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூருக்கு ஷார்ஜாவில் நகரத்தார் சங்கத்தில் அளித்த வாழ்த்துப்பா

Vinkmag ad

சார்ஜா ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு 150 வது கலந்துரையாடல்   (08-11-2013) நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக

வருகை தந்த பேராசிரியர்” பி.மு.மன்சூர் அவர்களை

வரவேற்று வாசித்தளித்த வாழ்த்துப்பா

 

ஓய்வுக்கு ஓய்வு சொன்ன தமிழ்மேடை

முனைவர் மாணாக்கருக்கு நீயொரு தமிழாடை

ஆய்வுக் கட்டுரைகளில் ஆராய்ச்சியில் தந்தார் பலவிடை

அன்று போல் தமிழ்ப்பணி செய்கிறது இன்றும் உன் நடை

 

கலைஞர் விரும்புகின்ற கவிஞர்களிலே அறிஞர்

கடல் தாண்டி பேசப்பட்ட கம்பத்துக் கவிஞர்

இனிய சைவ சித்தாந்தம் பேசிய இளைஞர்

பணிய தமிழுக்குப் போராடும் வழக்குரைஞர்

 

தங்கப் பதக்கம் முதுகலையால் பெற்றமை

இந்தப் பக்கம் தமிழாற்ற வந்தமை

நாடுபல தமிழ் மன்றத்துக்குச் சென்றமை

பாடும் இவரதுபுகழ் பல நாளேடுகளில் வந்தமை

 

காரம் பிடிக்கும் ஐயாஅது அதிகாரம்

தமிழைப் பிடிக்கும்  ஆகப்பிடித்தது அதிகாரம்

நான் எடுத்துக்கொண்டேன் உனைவாழ்த்த நேரம்

இதுக்குமேல் என்மக்கள் படுவார் கோபம்

 

ஆக்கிய நெறியாளர்கள் ஐம்பத்து நான்கு

தமிழகப் புலவர்குழு உறுப்பினரான பாங்கு

கூட்டத்தில் பேசுவதற்கு ஐயாநீர் நீங்கு

இவ்விடத்தில் ஊதுவார் நல்தமிழ் சங்கு 

 

 

வரவேற்கும் உள்ளங்கள்,                                       

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு                                                 

ஷார்ஜா.

ஆக்கம்: மெ. மணிகண்டன் (ஷார்ஜா),  சொக்கநாதபுரம்.

News

Read Previous

தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம்

Read Next

குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published.